ஹமாஸ் இயக்கத்தை வழிநடத்திய முக்கிய தலைவரை காணவில்லை: போரில் கொல்லப்பட்டிருக்கலாம் என அச்சம்

Wednesday, September 25th, 2024 at 10:36 (SLT)

காசா பகுதியில் ஹமாஸ் இயக்கத்தை வழிநடத்திய யாஹ்யா சின்வார் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் இஸ்ரேலிய தாக்குதலில் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும் வாசிக்க >>>

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி மற்றும் ரவைகள்: ஒருவர் கைது

Wednesday, September 25th, 2024 at 10:31 (SLT)

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி மற்றும் ரவைகளுடன் நபர் ஒருவரை பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். விசேட அதிரடிப்படை சியம்பலாண்டுவ முகாம் அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையிலேயே மொனராகலை, வெடிகும்புர பகுதியைச் சேர்ந்த 70 வயதுடைய ஒருவரே மேற்படி கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

நாடாளுமன்றத்திற்கு அருகில் விபத்து: இராணுவத்திற்கு சொந்தமானது என தகவல்

Wednesday, September 25th, 2024 at 10:28 (SLT)

நாடாளுமன்ற நுழைவாயிலுக்கு அருகில் இராணுவத்தினருக்கு சொந்தமான டிஃபென்டர் ரக வாகனம் விபத்துக்குள்ளாகியுள்ளது. இதன் காரணமாக நாடாளுமன்ற நுழைவாயிலுக்கு அருகில் உள்ள வீதியில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க >>>

வட மாகாண ஆளுனராகும் நாகலிங்கம் வேதநாயகன்: இன்று ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம்

Wednesday, September 25th, 2024 at 10:25 (SLT)

வடக்கு மாகாண ஆளுநராக யாழ்ப்பாணம் மாவட்ட முன்னாள் அரச அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் இன்று பதவிப்பிரமாணம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் வாசிக்க >>>

அனுரகுமாரவே இலங்கையின் கடைசி ஜனாதிபதி : சுனில் ஹந்துன்நெத்தி

Tuesday, September 24th, 2024 at 11:54 (SLT)

இலங்கையின் புதிய ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் அரசாங்கத்தின் முன்னுரிமை, நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்குவதே என தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்று உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார். கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே சுனில் ஹந்துன்நெத்தி இதனை கூறியுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

கட்டுப்பணத்தை இழந்த ஜனாதிபதி வேட்பாளர்கள்

Tuesday, September 24th, 2024 at 11:49 (SLT)

நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட பிரதான மூன்று வேட்பாளர்களை தவிர, ஏனைய 35 வேட்பாளர்களும் கட்டுப்பணத்தை இழந்தனர் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இது தொடர்பில் தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க கருத்து தெரிவிக்கையில்,

மேலும் வாசிக்க >>>

இலங்கை தொடர்பில் IMF வௌியிட்ட அறிவிப்பு

Tuesday, September 24th, 2024 at 11:44 (SLT)

இலங்கையில் புதிதாக தெரிவாகியுள்ள ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றுவதற்கு தயாராக இருப்பதாக சர்வதேச நாணய நிதியம் (IMF) அறிவித்துள்ளது. அறிக்கை ஒன்றை வௌியிட்டு சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சாளர் இதனைக் குறிப்பிட்டார்.

மேலும் வாசிக்க >>>

பாராளுமன்றம் கலைக்கப்பட்டதும், கைதாகவுள்ள அரசியல் பிரபலங்கள்

Tuesday, September 24th, 2024 at 10:41 (SLT)

30 பேரின் பெயர்ப்பட்டியல் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கையளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாட்டில் பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டவர்கள் தப்பிச் செல்லாதவாறு கட்டுநாயக்க விமான நிலையத்தில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

மேலும் வாசிக்க >>>

வடக்கு மாகாண ஆளுநர் இராஜினாமா

Tuesday, September 24th, 2024 at 10:36 (SLT)

வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். அறிக்கை ஒன்றை வௌியிட்டு வடமாகாண ஆளுநரின் ஊடகப்பிரிவு இதனை உறுதிப்படுத்தியுள்ளது.

மேலும் வாசிக்க >>>

புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை இன்று பதவியேற்பு

Tuesday, September 24th, 2024 at 10:33 (SLT)

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் அமைக்கப்படவுள்ள புதிய அமைச்சரவை இன்று (24) பதவிப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் வாசிக்க >>>

இஸ்ரேல் மீது கடுமையான ஏவுகணை தாக்குதல்: இலங்கையர்களுக்கு அவசர அறிவிப்பு

Tuesday, September 24th, 2024 at 10:27 (SLT)

இஸ்ரேலிய இலக்குகள் மீது ஹெஸ்பொல்ல ஏவுகணை தாக்குதல்கள் நடத்தி வருவதன் காரணமாக அங்கு தங்கியுள்ள இலங்கையர்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு இலங்கைக்கான இஸ்ரேலிய தூதுவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

ஜப்பானில் 5.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடுத்ததால் அச்சத்தில் மக்கள்

Tuesday, September 24th, 2024 at 10:22 (SLT)

ஜப்பானின் இசு தீவுகளுக்கு அருகில் 5.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இந் நிலநடுக்கத்தை தொடர்ந்து அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் மற்றும் உள்ளூர் வானிலை அதிகாரிகளால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் அத் தீவில் வசிக்கும் மக்கள் மிகுந்த அச்சத்துடன் காணப்படுகின்றனர்.

மேலும் வாசிக்க >>>

லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய கொடூர வான்வழித் தாக்குதல்: 492 பேர் உயிரிழப்பு

Tuesday, September 24th, 2024 at 10:18 (SLT)

லெபனானில் ஹெஸ்பொல்லாவை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய தீவிர வான்வழித் தாக்குதல்களில் குறைந்தது 492 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று அந்நாட்டின் சுகாதார அமைச்சகம் கூறுகிறது.

மேலும் வாசிக்க >>>

இன்று இரவு நாடாளுமன்றம் கலைக்கப்படுகின்றது?: டிசம்பருக்குள் பொது தேர்தல்

Tuesday, September 24th, 2024 at 10:15 (SLT)

நாடாளுமன்றம் இன்று இரவு கலைக்கப்படும் என்றும், எதிர்வரும் டிசம்பருக்குள் பொது தேர்தல் நடத்தப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரதமர் தினேஷ் குணவர்தன நேற்று பதவி விலகியிருந்தார்.

மேலும் வாசிக்க >>>

மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்ற எமது அரசியல் இலக்கு நோக்கி : டக்ளஸ் தேவானந்தா

Monday, September 23rd, 2024 at 10:50 (SLT)

மத்தியில் கூட்டாட்சி ! மாநிலத்தில் சுயாட்சி !என்ற எமது அரசியல் இலக்கு நோக்கி… மாற்றத்தை விரும்பிய மக்களின் விருப்பங்கள் நிறைவேற்றப்பட வேண்டும். நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் மாற்றம் ஒன்று நிகழவேண்டும் என்ற எதிர்பார்ப்போடு புதிய ஜனாதிபதியை தெரிவு செய்த மக்களின் மனவிருப்பங்கள் நிறைவேற்றப்பட வேண்டுமென ஈழமக்கள் ஜனாநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் ஊடகங்களுக்கான அறிக்கையில் தெரிவித்தார்.

மேலும் அந்த அறிக்கையில்:-

மேலும் வாசிக்க >>>