பிரதமர் தினேஷ் குணவர்தன தனது பதவியை இராஜினாமா செய்வதாக கடிதம் மூலம் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு இராஜினாமா கடிதம் ஒன்றை அனுப்பி வைத்து தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
மேலும் வாசிக்க >>>Monday, September 23rd, 2024 at 10:43 (SLT)
பிரதமர் தினேஷ் குணவர்தன தனது பதவியை இராஜினாமா செய்வதாக கடிதம் மூலம் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு இராஜினாமா கடிதம் ஒன்றை அனுப்பி வைத்து தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
மேலும் வாசிக்க >>>Monday, September 23rd, 2024 at 10:41 (SLT)
இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட அனுரகுமார திஸாநாயக்க சற்றுமுன்னர் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகத்தில் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில் அநுரகுமார திஸாநாயக்க பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
மேலும் வாசிக்க >>>Monday, September 23rd, 2024 at 7:20 (SLT)
ஜனாதிபதித் தேர்தல் வாக்களிப்பையடுத்து நேற்று முன்தினம்(21) இரவு அமுல்படுத்தப்பட்ட பொலிஸ் ஊரடங்குச் சட்டம் நேற்று(22) நண்பகல் 12 மணிக்கு தளர்த்தப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்தும் அது நீடிக்கப்பட மாட்டாது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
மேலும் வாசிக்க >>>Monday, September 23rd, 2024 at 6:51 (SLT)
வட கொரிய அரசு சோங்ஜின் பகுதியில் ரி மற்றும் காங் என இரு பெண்கள் பொது வெளியில் வைத்து தூக்கிலடப்பட்ட சம்பவம் சர்வதேச அளவில் கவலையை ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இருவரும் சீனாவில் உள்ள வட கொரிய மக்களை தென் கொரியாவுக்கு தப்பி செல்ல வைக்க உதவி வந்ததாக கூறப்படுகிறது.கடந்த 2023 அக்டோபர் மாதம் சீனாவால் வலுக்கட்டாயமாக திருப்பி அனுப்பப்பட்ட சுமார் 500 வட கொரியர்களில் 39 வயதான ரி மற்றும் 43 வயதான காங் என இருவரும் அடங்குவர்.
மேலும் வாசிக்க >>>Sunday, September 22nd, 2024 at 20:36 (SLT)
தான் ஜனாதிபதி பதவியில் இருந்து விலகுவதாக ரணில் விக்ரமசிங்க உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். தற்போது நடந்து முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலில் மக்கள் வழங்கிய ஆணையின் படி, புதிய ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிடம் நாட்டை ஒப்படைக்க வேண்டும் என்று தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும் வாசிக்க >>>Sunday, September 22nd, 2024 at 20:29 (SLT)
பல நூற்றாண்டுகளாக நாம் வளர்த்து வந்த கனவு இறுதியாக நனவாகும். இந்த சாதனை எந்த ஒரு நபரின் உழைப்பின் விளைவு அல்ல, ஆனால் நூறாயிரக்கணக்கான உங்களின் கூட்டு முயற்சி. உங்கள் அர்ப்பணிப்பு எங்களை இவ்வளவு தூரம் கொண்டு வந்துள்ளது, அதற்காக நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். இந்த வெற்றி நம் அனைவருக்கும் சொந்தமானது என தனது x தளத்தில் பதிவிட்டுள்ளார்
மேலும் வாசிக்க >>>Sunday, September 22nd, 2024 at 20:25 (SLT)
நாட்டின் 9ஆவது ஜனாதிபதியாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு சற்று முன்னர் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
மேலும் வாசிக்க >>>Sunday, September 22nd, 2024 at 12:35 (SLT)
Live Sri Lanka Presidential Election Results 2024 | Real-Time Results (elections.gov.lk)
Sunday, September 22nd, 2024 at 11:59 (SLT)
நாடளாவிய ரீதியில் தேர்தலுக்குப் பின்னரான பாதுகாப்புக்கென காவல்துறையால் ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப்பட்ட நிலையில் இன்று (22) ஞாயிற்றுக்கிழமை நண்பகல் வரை குறித்த ஊரடங்கு சட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
மேலும் வாசிக்க >>>Sunday, September 22nd, 2024 at 11:49 (SLT)
2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல், இலங்கை வரலாற்றில் மிகவும் அமைதியான தேர்தலாக இடம்பிடிக்குமென சுதந்திரமானதும் மற்றும் நியாயமானதுமான தேர்தலுக்கான (PAFFREL) அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
மேலும் வாசிக்க >>>Saturday, September 21st, 2024 at 18:44 (SLT)
ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று காலை 7.00 மணி முதல் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றன. இன்று மாலை 4.00 மணி வரை வாக்காளர்கள் தமது வாக்குகளைப் அளிக்க முடியும்.
மேலும் வாசிக்க >>>Saturday, September 21st, 2024 at 7:59 (SLT)
உடவலவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஹஆர பிரசேத்தில் வைத்து உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அறிக்கை ஒன்றை வௌியிட்டு பொலிஸ் ஊடகப்பிரிவு இதனைக் குறிப்பிட்டுள்ளது.
மேலும் வாசிக்க >>>Saturday, September 21st, 2024 at 7:52 (SLT)
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தல் இன்று (21) காலை 7 மணிக்கு ஆரம்பமாகியுள்ளது.
மேலும் வாசிக்க >>>Friday, September 20th, 2024 at 10:39 (SLT)
விசாரணைக்காக தேடப்பட்டு வந்த சந்தேகநபர் ஒருவர் டுபாயில் இருந்து நாடு திரும்பிய நிலையில் கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். பண மோசடியில் ஈடுபட்ட சந்தேகநபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும் வாசிக்க >>>Friday, September 20th, 2024 at 10:35 (SLT)
ஜனாதிபதித் தேர்தல் பாதுகாப்புக்காக நாடளாவிய ரீதியில் பொலிஸ் வீதி தடைகளை ஏற்படுத்துவதற்கும் வன்முறை சம்பவங்கள் இடம்பெறலாம் என எதிர்பார்க்கும் பிரதேசங்களுக்கு மேலதிகமான பாதுகாப்பை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதித் தேர்தல் பாதுகாப்புக்காக முப்படை வீரர்களையும் போதியளவில் ஈடுபடுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் வாசிக்க >>>