திருகோணமலையில் தேர்தல் பாதுகாப்புக்காக 10000 பொலிசார் கடமையில் ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி

Wednesday, September 18th, 2024 at 12:07 (SLT)

திருகோணமலை மாவட்டத்தில் ஜனாதிபதி தேர்தல் பணிக்காக 10000 பொலிசார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்திசெய்யப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான சாமிந்த ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.

ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக இன்று(18) மாவட்ட செயலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தேர்தலுக்கான அனைத்து ஏற்பபாடுகளும் பூர்த்திசெய்யப்பட்டுள்ளது. அத்துடன் தேர்தல் தினத்தில் நடந்துகொள்ளவேண்டிய முறைமைகள் தொடர்பாக வேட்பாளர்களின் முகவர்கள், பொலிசார், தேர்தல் கண்காணிப்பாளர்கள், ஊடகவியலாளர்கள் உட்பட ஏனையதரப்புக்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

திருகோணமலை மாவட்டத்தில் 315,925 வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இதில் மூதூர் தொகுதியில் இருந்து 123,363 வாக்காளர்களும், திருகோணமலை தேர்தல் தொகுதியில் இருந்து 105,005 வாக்காளர்களும், சேருவில தொகுதியில் இருந்து 87,557 வாக்காளர்களும் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர் என்றும் தெரிவித்தார்.

இதேவேளை, வாக்கெண்ணும் பணிகளுக்காக 1632 உத்தியோகத்தர்களும், வாக்களிப்பு நிலையங்களுக்கு 1908 உத்தியோகத்தர்களும் பயன்படுத்தப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.


நாட்டை முன்னேற்ற அனுரவும் முன்வரவில்லை, சஜித்தும் முன்வரவில்லை:அவர்களை தும்புத்தடியால் விரட்டுங்கள் ரணில் கோரிக்கை

Wednesday, September 18th, 2024 at 12:03 (SLT)

இந்த நாடு நெருக்கடியில் இருந்தபோது சஜித்தோ அநுரவோ அதனை முன்னேற்ற முன்வரவில்லை. அவர்கள் பின்வாங்கியுள்ளனர். நான் இந்த நாட்டை பொறுப்பேற்ற பிறகு பொருளாதாரம் முன்னேற ஆரம்பித்துள்ளது. மக்கள் மீன் பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். விவ சாயம் செய்கின்றனர். கடைகள் திறக்கப்பட்டுள்ளன. கஷ்டப்ப டும் போது வராமல் இப்பொழுது தேர்த லுக்காக உங்களிடம் வந்திருக்கும் இவர்களைத் தும்புத் தடியால் அடித்துத் துரத்தவேண்டும். என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

துப்பாக்கியுடன் ஒருவர் கைது

Wednesday, September 18th, 2024 at 8:06 (SLT)

மாங்குளம்‌ பொலிஸ்‌ பிரிவிற்குட்பட்ட பனிச்சங்குளம்‌ பகுதியில்‌ உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

மொத்தமாக வெடித்து சிதறிய ஹிஸ்புல்லாக்களின் பேஜர் கருவிகள்: லெபனான் முழுவதும் பரபரப்பு

Wednesday, September 18th, 2024 at 8:00 (SLT)

லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பைச் சேர்ந்தோர் தகவல் பரிமாற்றத்துக்காக பயன்படுத்திவரும் மின்னணு தொலைத்தொடர்பு கருவிகளில் உள்ள பேட்டரிகளை வெடிக்க செய்ததில் 9 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் சுமார் 3,000 பேர் காயமடைந்துள்ளதோடு அதில் 200 பேரின் நிலைமை கவலைக்கிடம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் வாசிக்க >>>

ஆப்பிரிக்க நாடுகளில் தீவிரமடையும் குரங்கு அம்மை: இதுவரை 700க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

Wednesday, September 18th, 2024 at 7:52 (SLT)

ஆப்பிரிக்க நாடுகளில் Mpox எனப்படும் குரங்கு அம்மை நோய் வேகமாக பரவி வருகின்றது. இதுவரை 700க்கும் மேற்பட்டோர் குரங்கு அம்மையினால் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.கடந்த வாரத்தில் மாத்திரம் 107 மரணங்கள் பதிவாகியிருந்தன.

மேலும் வாசிக்க >>>

அவசர சிகிச்சைப் பிரிவில் இலங்கையின் பொருளாதாரம்: தகுதியற்ற வைத்தியரை நிராகரிக்குமாறு ரணில் கோரிக்கை

Wednesday, September 18th, 2024 at 7:46 (SLT)

இலங்கையின் பொருளாதார நோயாளர் சத்திரசிகிச்சையின் பின்னர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

நிற, கட்சி பேதங்கள் இன்றி அனைவரையும் பாதுகாப்போம்:சஜித் பிரேமதாச

Tuesday, September 17th, 2024 at 12:09 (SLT)

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, மற்றும் ஏனைய கட்சிகள் அத்தோடு கட்சிகளை சாராத குழுக்களில் உள்ளவர்கள் என அனைவரையும் நாம் அதிகாரத்திற்கு வந்த பிறகு மனிதநேயத்தின் நாமத்தினால் பாதுகாப்போம் என் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

திலித்திடம் இருந்து புதிய நிவாரண திட்டம்

Tuesday, September 17th, 2024 at 12:05 (SLT)

“ஹிதே ஹய்ய” (மனதில் உறுதி) என்ற வேலைத்திட்டம் ஒன்று திட்டமிடப்பட்டுள்ளதாக சர்வஜன அதிகார ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீர தெரிவித்துள்ளார். மொனராகலை பகுதியில் இடம்பெற்ற மக்கள் பேரணியில் கலந்துகொண்டு கருத்து வௌியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

மேலும் வாசிக்க >>>

நாட்டை மீண்டும் இருளில் தள்ளும் வரிசை யுகம் உருவாக இடமளிக்காதீர்கள் : ரணில் விக்ரமசிங்க

Tuesday, September 17th, 2024 at 12:03 (SLT)

வளமான மற்றும் நிலையான பொருளாதாரம் கொண்ட நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டுமா அல்லது நாட்டை மீண்டும் வரிசை யுகத்திற்கு தள்ளுவதா என்பதை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மக்கள் தீர்மானிக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார்.

மேலும் வாசிக்க >>>

வாக்காளர் அட்டைகள் கிடைக்கவில்லையா?

Tuesday, September 17th, 2024 at 11:54 (SLT)

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளில் சுமார் 97 வீதம் விநியோகிக்கப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த 3ஆம் திகதி ஆரம்பமான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை விநியோகம் 14ஆம் திகதி நிறைவடைந்ததாக பிரதி தபால் அதிபர் ராஜித ரணசிங்க குறிப்பிட்டார்.

மேலும் வாசிக்க >>>

சகோதரனை சுட்டுக்கொலை செய்த குற்றத்தில் இளைஞன் கைது

Tuesday, September 17th, 2024 at 11:51 (SLT)

சகோதரர்களுக்கு இடையிலான மோதல் துப்பாக்கி சூட்டில் முடிவடைந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அம்பாறை , சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் நேற்றைய தினம் திங்கட்கிழமை இரவு இடம்பெற்ற சம்பவத்தில் அப்பகுதியை சேர்ந்த பக்கீர் முகையதீன் றோஜான் (வயது 28) என்பவரே உயிரிழந்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

கள்ள வாக்குப் போட்டால் 7 ஆண்டுகள் வாக்களிக்க தடை

Tuesday, September 17th, 2024 at 11:48 (SLT)

எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் கள்ள வாக்களிப்பில் ஈடுபடுபவர்களுக்கு 2023 ஆம் ஆண்டு 21 ஆம் இலக்க சட்டத்தின் பிரகாரம், ஒரு வருடகால சிறைத் தண்டனையும் 02 லட்சம் ரூபா தண்டப்பணமும் விதிக்கப்படுமென தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

Tuesday, September 17th, 2024 at 7:36 (SLT)

பேருவளை-கரந்தகொட பிரதேசத்தில் வைத்து ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

வாகன இறக்குமதியால் அந்நிய செலாவணி கையிருப்பில் ஏற்படும் மாற்றம்: புதிய வரிகளை விதிக்க தயாராகும் அரசாங்கம்

Tuesday, September 17th, 2024 at 7:30 (SLT)

இலங்கையில் வாகன இறக்குமதி மீதான கட்டுப்பாடுகள் படிப்படியாக நீக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், புதிய வரி விதிப்பதிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க >>>

பெண்களை புனர்வாழ்வளிக்க விசேட நிலையம்: நீதிச்சேவை ஆணைக்குழு பணிப்பு

Tuesday, September 17th, 2024 at 7:24 (SLT)

போதைப்பொருள் பாவனைக்கு அடிமையான பெண்களை புனர்வாழ்வளிக்க விசேட நிலையமொன்றை நிறுவுவதற்கு புனர்வாழ்வு பணியகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

மேலும் வாசிக்க >>>