மனைவியை கொலை செய்த கணவர் கைது

Sunday, September 15th, 2024 at 9:49 (SLT)

தனிப்பட்ட தகராறு காரணமாக கணவன் தனது மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளார்.நேற்று (14) மாலை வாத்துவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொதுப்பிட்டிய பிரதேசத்தில் இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. கோரகஹவத்த, பொதுப்பிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் 23 வயதுடைய யுவதியே உயிரிழந்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

முதலைக்குடாவில் சஜித்தின் தேர்தல் பிரச்சார அலுவலகம் திறந்து வைப்பு

Saturday, September 14th, 2024 at 13:26 (SLT)

ஜனாதிபதி வேட்பாளரும் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தலைவருமான சஜித் பிரேமதாசாவின் தேர்தல் பிரச்சார அலுவலகம் கொக்கட்டிச்சோலை முதலைக்குடாவில் நேற்று வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது .ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் மட்டக்களப்பு மாவட்டத்தலைவரும் முன்னாள் பிரதி அமைச்சருமான சோ. கணேசமூர்த்தி அலுவலகத்தை நாடா வெட்டி திறந்து வைத்தார் . ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் பட்டிப்பளை பிரதேச தலைவரும் முன்னாள் தவிசாளரும் அதிபருமான சிவ.அகிலேஸ்வரன் தலைமையில் திறப்பு விழா இடம் பெற்றது.

மேலும் வாசிக்க >>>

மக்களுக்கான அரசாங்கத்தை ஸ்தாபிக்க தயார்: பிரச்சார கூட்டத்தில் அனுர திட்டவட்டம்

Saturday, September 14th, 2024 at 13:20 (SLT)

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் எமது வெற்றியை இனிமேல் மாற்ற முடியாது எனவும், மக்களுக்கான அரசாங்கத்தை தாம் ஸ்தாபிக்க இருப்பதாகவும் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். அம்பாறையில் இடம்பெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அனுரகுமார திஸாநாயக்க இவ்வாறு தெரிவித்திருந்தார்.

மேலும் வாசிக்க >>>

கொள்ளையடித்த ஞானசாரர், 82 வயது முதியவருக்கு ஏற்பட்ட துயரம் : நீதிமன்றத்தின் அதிரடி

Saturday, September 14th, 2024 at 8:57 (SLT)

கலபொட அத்தே ஞானசார தேரரால் பலவந்தமாக கைப்பற்றப்பட்டதாக கூறப்படும் கொழும்பு பம்பலப்பிட்டியவில் அமைந்துள்ள 100 மில்லியன் ரூபாய் பெறுமதியான வீட்டையும் சொத்துக்களையும் உடனடியாக விடுவிக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் வாசிக்க >>>

தேர்தல் அவதூறு பரப்புரைகளை நிறுத்துவதற்கு தீவிர முயற்சி:தேர்தல்கள் ஆணைக்குழு

Saturday, September 14th, 2024 at 8:51 (SLT)

ஜனாதிபதி தேர்தல் பிரசாரம் முடிவடைந்த பின்னர் 48 மணித்தியாலங்கள் அமைதியான காலப்பகுதியில் வேட்பாளர் பிரசாரம் மற்றும் சமூக ஊடகங்களில் சேறு பூசுவதை நிறுத்துவதற்கான விரிவான வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த தேர்தல்கள் ஆணைக்குழு திட்டமிட்டுள்ளது.

மேலும் வாசிக்க >>>

தொழிலுக்காக குவைத் சென்ற பெண்: வீட்டில் அடைத்து வைத்து, உணவு வழங்காமல் சித்ரவதை

Saturday, September 14th, 2024 at 8:46 (SLT)

இந்தியா ஆந்திர மாநிலம், அன்னமைய்யா மாவட்டத்தைச் சேர்ந்த கவிதா எனும் பெண், தொழிலுக்காக குவைத் (Kuwait) நாட்டுக்கு சென்றுள்ளார்.ஆனால், கவிதாவுக்கு அங்கு கூறியபடி தொழிலோ அல்லது சம்பளமோ கிடைக்கவில்லை.

மேலும் வாசிக்க >>>

இரு தீமைகளில் யார் குறைவானவர்?: ட்ரம்ப், கமலா குறித்து போப் பிரான்சிஸ் கருத்து

Saturday, September 14th, 2024 at 8:42 (SLT)

கத்தோலிக்க திருச்சபை தலைவர் போப் பிரான்சிஸ் இந்தோனேஷியா, தைமூர், நியூகினியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். சுற்றுப்பயணத்தை நிறைவு செய்த போப் பிரான்சிஸ் ரோம் திரும்பும் விமானத்தில் வைத்து செய்தியாளர்களைச் சந்தித்தார்.நடைபெறவிருக்கும் அமெரிக்க தேர்தல் குறித்து செய்தியாளர்கள் அவரிடம் கேள்வியெழுப்பினர்.

மேலும் வாசிக்க >>>

தேர்தல் பிரசாரத்தை ஊக்குவிக்க விருந்துபசாரம் : ரணிலுக்கு எதிராக அதிரடி நடவடிக்கை

Friday, September 13th, 2024 at 12:11 (SLT)

சுயேட்சை வேட்பாளர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது தேர்தல் பிரசாரத்தை ஊக்குவிக்கும் வகையில் விருந்துபசாரம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளதாகவும் அது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தேர்தல் கண்காணிப்பு நிலையம் தெரிவித்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

ரணில் விக்ரமசிங்கவே மீண்டும் ஜனாதிபதியாக வர வேண்டும் : யாழில் அங்கஜன்

Friday, September 13th, 2024 at 12:08 (SLT)

நாட்டில் பல்வேறு வேலைத் திட்டங்களை முன்னெடுத்து வரும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவே மீண்டும் ஜனாதிபதியாக வர வேண்டுமென சிறிலங்கா சுதந்திர கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

ரணில் நாட்டை புதிய பிரச்சினையில் சிக்க வைத்துள்ளார்:சஜித் பிரேமதாச

Friday, September 13th, 2024 at 8:23 (SLT)

உயிர்த்த ஞாயிறு தாக்குதல், கொரோனா கோவிட் தொற்று பரவல், நாட்டின் வங்குரோத்து நிலைமை என்னவற்றினால் 220 இலட்சம் மக்கள் பாதிக்கப்பட்டார்கள். நாடு விழுந்திருக்கின்ற இந்த பாதாளத்திலிருந்து மீட்டெடுக்க வேண்டும்.

மேலும் வாசிக்க >>>

கட்சித் தீர்மானத்தை சிறீதரனும், மாவையும் ஏற்றுள்ளனர்: சஜித்திற்கு ஆதரவளிப்பதில் மாற்றமில்லை என்கிறார் சுமந்திரன்

Friday, September 13th, 2024 at 8:18 (SLT)

ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்கும் கட்சியின் தீர்மானத்தில் எந்த மாற்றமும் இல்லை என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

மலேசியாவில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 400 குழந்தைகள் மீட்பு: இஸ்லாமிய மத ஆசிரியர்கள் உட்பட 170 பேர் கைது

Friday, September 13th, 2024 at 8:14 (SLT)

மலேசியாவில் நூற்றுக்கணக்கான குழந்தைகளை உடல் ரீதியாகவும் பாலியல் ரீதியாகவும் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் பராமரிப்பு இல்லங்களிலிருந்து அந்நாட்டு அதிகாரிகள் மீட்டுள்ளதாக ரொயிட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் வாசிக்க >>>

நாட்டை கட்டியெழுப்பத் தயார்:அனுரகுமார திஸாநாயக்க

Thursday, September 12th, 2024 at 10:43 (SLT)

நாட்டின் பொருளாதாரத்தை விஸ்தரிப்பதற்கு தமது அரசாங்கத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய மக்கள் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். கண்டி மஹியாவ பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் ஒவ்வொரு வேட்பாளரும் தனது உண்மையான பொருளாதாரக் கொள்கையை நாட்டுக்கு முன்வைக்க வேண்டும் : ஜனாதிபதி

Thursday, September 12th, 2024 at 10:39 (SLT)

நாட்டினதும் நாட்டு மக்களினதும் எதிர்காலத்தைத் தீர்மானிக்கக் கூடிய இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் ஒவ்வொரு வேட்பாளரும் நாட்டை முன்னேற்றும் தனது உண்மையான பொருளாதாரக் கொள்கையை நாட்டிற்கு முன்வைக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

திருட்டு அரசியலுக்கு முடிவு கட்ட வேண்டிய தருணம் : திலித் ஜயவீர வலியுறுத்து

Thursday, September 12th, 2024 at 10:31 (SLT)

நாட்டு மக்களை பல வருடங்களாக வறுமையில் தள்ளியுள்ள, திருட்டு அரசியலுக்கு முடிவு கட்ட வேண்டிய தருணம் வந்துள்ளதாக ‘சர்வஜன பலய’ கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் தொழிலதிபர் திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>