இலங்கையில் தபால் மூல வாக்குப்பதிவு நாளை ஆரம்பம்

Tuesday, September 3rd, 2024 at 8:28 (SLT)

இந்த ஆண்டுக்கான ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு நடவடிக்கைகள் நாளை (04) ஆரம்பமாகவுள்ளன. மாவட்டச் செயலக அலுவலகங்கள், தேர்தல் ஆணைக்குழு அலுவலகங்கள், சிரேஷ்ட மற்றும் பிரதி பொலிஸ்மா அதிபர் அலுவலகங்கள், பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகங்கள், பொலிஸ் நிலையங்கள், சிறப்பு அதிரடிப் படை முகாம்கள், சிறப்பு பொலிஸ் பிரிவுகள் மற்றும் உயரடுக்கு பாதுகாப்புப் பிரிவுகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு நாளை தபால் மூலம் தனது வாக்கினை அடையாளப்படுத்த சந்தர்ப்பம் கிடைக்கும் என தேர்தல் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

மேலும் வாசிக்க >>>

தேர்தல் தொடர்பில் கருத்துக் கணிப்பு செய்வோரை உடன் கைது செய்யுமாறு உத்தரவு

Tuesday, September 3rd, 2024 at 8:25 (SLT)

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கருத்துக்கணிப்புகளை மேற்கொள்பவர்களை உடன் கைது செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் மேலதிக வகுப்புகள் மற்றும் சமூக வலைத்தளங்கள் ஊடாக கருத்துக் கணிப்புகள் மேற்கொள்ளப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

மேலும் வாசிக்க >>>

மகிந்த ராஜபக்சவின் அரசியல் கொள்கைகளையே கடைப்பிடிப்பேன்: நாமல்

Tuesday, September 3rd, 2024 at 8:21 (SLT)

மகிந்த ராஜபக்சவின் அரசியல் மற்றும் பொருளாதாரக் கொள்கைகளை நான் கடைப்பிடிப்பேன். நாட்டின் ஒற்றையாட்சியைப் பாதுகாத்தே தீருவேன் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

கலவரங்களின் பின்னணியில் ஜே.வி.பி: எஸ்.பி.திஸாநாயக்க

Monday, September 2nd, 2024 at 12:19 (SLT)

நமது நாட்டில் கடந்த காலங்களில் இடம்பெற்ற கலவரங்களின் பின்னணியில் ஜே.வி.பி. பேய்கள் மிருகத்தனமாக செயற்பட்டதை யாரும் மறந்துவிட கூடாது என நுவரெலியா மாவட்ட பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினரும், மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான எஸ்.பி.திஸாநாயக்க சாடினார்.

மேலும் வாசிக்க >>>

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட சஜித்திற்கும் அநுரவுக்கு நானே வாய்ப்பு வழங்கினேன் : ரணில்

Monday, September 2nd, 2024 at 12:16 (SLT)

நாட்டில் நிலவிய பொருளாதார நெருக்கடிக்கு பயந்து ஓடிய சஜித்தும் அநுரவும் தற்போது தனது தலைமையில் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார ஸ்திரத்தன்மை காரணமாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைத்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

ரயில் நிலையத்தில் அட்டாகசம் தமிழ் இளைஞர் மீதும் தாக்குதல் இராணுவ சிப்பாய்கள் எண்மர் கைது

Monday, September 2nd, 2024 at 12:14 (SLT)

பண்டாரவளை, ரயில் நிலையத்தில் தமிழ் இளைஞர் ஒருவரை தாக்கி, குழப்பத்தில் ஈடுபட்டனர் எனக் கூறப்படும் இராணுவ சிப்பாய்கள் எண்மர் கைது செய்யப்பட்டுள்ளனர். ரயில் நிலைய அதிபரால், பண்டாரவளை பொலிஸாருக்கு தொலைபேசி ஊடாக வழங்கப்பட்ட தகவலுக்கமைய இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் வாசிக்க >>>

நாமல் இலக்கு உங்களுக்காக முன்னேற்றகரமான நாடு : தேர்தல் விஞ்ஞாபனம் வெளியீடு

Monday, September 2nd, 2024 at 12:11 (SLT)

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷவின் கொள்கை பிரகடனம் இன்று வெளியிடப்பட்டது. ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்ற ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க, மற்றும் திலித் ஜயவீர ஆகியோர் தமது தேர்தல் விஞ்ஞாபனங்களை வெளியிட்டுள்ள நிலையில் நாமல் ராஜபக்ச இன்று தனது கொள்கை பிரகடனத்தை வெளியிட்டுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் நடத்தப்பட்ட போலி வாக்களிப்பு: எம்பிலிப்பிட்டிய பொலிஸில் முறைப்பாடு

Monday, September 2nd, 2024 at 7:49 (SLT)

எம்பிலிப்பிட்டியவில் பொது இடத்தில் போலியான வாக்களிப்பு நிலையத்தை நடத்தி அதன் பெறுபேறுகளை சமூக ஊடகங்களில் வெளியிட்டமை தொடர்பில் உடனடியாக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க >>>

பங்களாதேஷில் குறிவைக்கப்படும் இந்து ஆசிரியர்கள்: இராஜினாமா செய்ய கட்டாயப்படுத்திய போராட்டகாரர்கள்

Monday, September 2nd, 2024 at 7:46 (SLT)

பங்களாதேஷில் உள்ள இந்து சிறுபான்மையினர் தொடர்ந்து அதிகரித்து வரும் அழுத்தத்தை எதிர்கொள்கின்றனர்.ஷேக் ஹசீனா அரசாங்கத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் அதிகரித்து வரும் ஆசிரியர்கள் தங்கள் அரசாங்கப் பதவிகளில் இருந்து இராஜினாமா செய்ய நிர்பந்திக்கப்படுகிறார்கள்.

மேலும் வாசிக்க >>>

ரணில் தோல்வியடைந்தால் முழு நாடும் தோல்வியடையும்: மருதபாண்டி ராமேஷ்வரன்

Sunday, September 1st, 2024 at 10:50 (SLT)

ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க வெற்றிபெற வேண்டியது காலத்தின் கட்டாய தேவையாகும். சிலவேளை ரணில் விக்கிரமசிங்க தோல்வியடைந்தால் முழு நாடும் தோல்வியடையும். மீண்டும் வரிசை யுகம் உருவாகும் என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தவிசாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரன் தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

இனவாதம் இல்லாத சுபிட்சமான வாழ்க்கையை உருவாக்குவோம்: சஜித் பிரேமதாசா

Sunday, September 1st, 2024 at 10:45 (SLT)

கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் எரிப்பதா நல்லடக்கம் செய்வதா என்கின்ற பிரச்சினை எழுந்த போது மக்களுடைய வாக்குகளால் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்களுடைய மத கலாச்சார, மக்களுடைய பண்பாட்டு விடயங்களை மறந்து தனிப்பட்ட இலாபத்திற்காகவும், வரப்பிரசாதங்களை பெற்றுக் கொள்வதற்காகவும் மதத்தையும், அறத்தையும், சுய கௌரவத்தையும் காட்டிக் கொடுத்து, இனவாதத்தை தூண்டியதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

பதுளையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் பெண் ஒருவர் படுகாயம்: உள்நாட்டுச் செய்தி தொகுப்பு

Sunday, September 1st, 2024 at 10:38 (SLT)

பதுளை, ஹிடகொட பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்று (31) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பிள்ளைகளின் தாய் காயமடைந்து பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த துப்பாக்கிச் சூட்டில் கணவர் மீது சந்தேகம் இருப்பதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

மேலும் வாசிக்க >>>

10 அரச துறைகளைச் சார்ந்த ஊழியர்களின் சம்பளம் அதிகரிப்பு: ஜனவரி முதல் நடைமுறை

Sunday, September 1st, 2024 at 10:35 (SLT)

2025 ஜனவரி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் 10 அரச துறைகளைச் சார்ந்த ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் வாசிக்க >>>

அவுஸ்திரேலியாவில் தனது மனைவியை கொலை செய்த இலங்கையர்: குற்றவாளியாக அறிவித்தது நீதிமன்றம்

Sunday, September 1st, 2024 at 10:31 (SLT)

அவுஸ்திரேலியாவில் தனது மனைவியை கொலை செய்த சம்பவம் தொடர்பில் இலங்கையர் ஒருவர் நீதிமன்றாத்தால் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

காசா போலியோ தடுப்பூசி : UAE $5 மில்லியன் நன்கொடை

Saturday, August 31st, 2024 at 10:48 (SLT)

காசா போலியோ தடுப்பூசி பிரச்சாரத்திற்கு ஐக்கிய அரபு அமீரகம் $5 மில்லியன் நன்கொடை அளிக்கிறது.ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) காசா பகுதியில் போலியோவிற்கு எதிரான அவசர தடுப்பூசி பிரச்சாரத்திற்கு ஆதரவாக $5 மில்லியன் நன்கொடை அளிக்கிறது என்று அதன் அதிகாரப்பூர்வ WAM செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் வாசிக்க >>>