தகராறு முற்றியதால் துப்பாக்கிச் சூடு : ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி

Thursday, August 29th, 2024 at 10:02 (SLT)

தலாவ மெதகம பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்து அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (28) காலை இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் வாசிக்க >>>

நடுக்கடலில் படகு கவிழ்ந்து விபத்து : மாயமான மீனவர் ஒருவர் சடலமாக மீட்பு

Thursday, August 29th, 2024 at 9:59 (SLT)

கச்சதீவுக்கு அண்மையில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளான நிலையில் காணாமல் போன இரு இந்திய மீனவர்களில் ஒருவர் சடலமாக மீட்கட்டுள்ளார். காப்பாற்றப்பட்ட இரண்டு இந்திய மீனவர்களும் நேற்று யாழ்ப்பாணம் இந்திய துணைத் தூதரகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் வாசிக்க >>>

நாட்டில் மீண்டும் சிவில் போர் வெடிக்கும் எச்சரிக்கை விடுத்த வஜிர அபேவர்தன

Thursday, August 29th, 2024 at 9:56 (SLT)

நாட்டில் மீண்டும் சிவில் போர் வெடிக்கும் அபாயம் காணப்படுவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மக்கள், ரணில் தவிர்ந்த வேறும் வேட்பாளர்களுக்கு வாக்களித்தால் இவ்வாறு சிவில் போர் வெடிக்க வாய்ப்பு உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

இலங்கையில் குழந்தைகளுக்கான சவர்க்காரத்தில் மோசடி: பெற்றோருக்கு அவசர எச்சரிக்கை

Thursday, August 29th, 2024 at 9:48 (SLT)

குழந்தைகளின் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் குறைந்த TFM மதிப்பில் குழந்தைகளுக்கான சவர்க்காரங்களை தயாரித்து விற்பனை செய்யும் மோசடியில் பலர் ஈடுபட்டு வருவதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. குழந்தைகளுக்கான சவர்க்காரங்களுக்கு SLS சான்றிதழைப் பெறுவது கட்டாயமில்லை என்பதால், சில நிறுவனங்கள் TFM மதிப்பில் குழந்தை சவர்க்காரங்களை தயாரித்து விற்பனை செய்யும் மோசடியில் ஈடுபட்டுள்ளன.

மேலும் வாசிக்க >>>

சஜித் பிரேமதாச வெற்றி பெற்றால் நாட்டை ஆளப் போவது அவரல்ல:அமைச்சர் பிரசன்ன ரணதுங்க

Wednesday, August 28th, 2024 at 9:53 (SLT)

ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாச வெற்றி பெற்றால் நாட்டை ஆளப் போவது அவரல்ல. மாறாக அவரது மனைவி, சகோதரி உள்ளிட்ட “பிரேமதாச” குடும்ப உறுப்பினர்களே என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். சபிக்கப்பட்ட குடும்ப ஆட்சியில் இருந்து நாட்டைக் காப்பாற்ற வேண்டுமானால் இந்த ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு வாக்களிக்க வேண்டும் என அமைச்சர் வலியுறுத்துகிறார்.

மேலும் வாசிக்க >>>

தமிழ் எம்.பி.க்களுடன் நடந்த கலந்துரையாடல் குறித்து ஜனாதிபதி விளக்கம்

Wednesday, August 28th, 2024 at 9:49 (SLT)

வடக்கு கிழக்கு அபிவிருத்தி தொடர்பில் தமிழ் எம்.பிக்களுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடல்கள் குறித்து ஜனாதிபதி, இலங்கை ராமன்ய மகா பீட மகாநாயக்க தேரருக்கு விளக்கமளித்தார். நாரஹேன்பிட்டி, இலங்கை ராமன்ய மகா நிகாயவின் தலைமையகத்திற்கு நேற்று (27) முற்பகல் விஜயம் செய்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அங்கு ராமன்ய மகா நிகாயவின் மகாநாயக்க தேரர் வண, மகுலேவே விமல நாயக தேரரைச் சந்தித்து ஆசி பெற்றார்.

மேலும் வாசிக்க >>>

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை அமோக வெற்றி பெறச் செய்ய வேண்டும் : அமைச்சர் ஜீவன் தொண்டமான்

Wednesday, August 28th, 2024 at 9:47 (SLT)

ஜனாதிபதித் தேர்தலில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை அமோக வெற்றி பெறச் செய்ய வேண்டும் என, நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.கொட்டகலை பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கருத்து தெரிவித்த போதே, அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

இன்று முதல் செப். 06 வரை இலங்கைக்கு நேரே சூரியன் உச்சம்

Wednesday, August 28th, 2024 at 9:42 (SLT)

சூரியனின் தெற்கு நோக்கிய தோற்ற இடப்பெயர்ச்சி காரணமாக, இன்று (28) முதல் செப்டெம்பர் 06 வரை இலங்கைக்கு நேரே சூரியன் உச்சம் கொள்ளும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. அதற்கமைய, இன்று (28) பி.ப. 12:11 மணியளில் நெடுந்தீவு, பூநகரி, தட்டுவான்கோட்டை, சுண்டிக்குளம் ஆகிய பகுதிகளில் சூரியன் உச்சம் கொடுக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க >>>

வரி குறைப்பு அபாயகரமானது : ஜனாதிபதி

Wednesday, August 28th, 2024 at 9:39 (SLT)

தற்போது வரி குறைப்பை மேற்கொள்வது மிகவும் அபாயகரமானது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். மாவனல்லை பகுதியில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

மேலும் வாசிக்க >>>

அமைச்சர்களுக்கு இரண்டு துப்பாக்கிகள் அரசு புதிய தீர்மானம்: பந்துல குணவர்தன

Wednesday, August 28th, 2024 at 9:35 (SLT)

பணத்திற்கு இரண்டு துப்பாக்கிகளை பெற்றுக்கொள்ளும் உரிமையை பாராளுமன்ற அமைச்சர்களுக்கு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

தேசிய மக்கள் சக்தியின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது : அனுரகுமார

Wednesday, August 28th, 2024 at 9:32 (SLT)

தேசிய மக்கள் சக்தியின் வெற்றியைத் தடுக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடைசி நேரத்தில் ஏதேனும் தந்திரத்தை மேற்கொள்வார் என்ற சந்தேகம் சிலருக்கு இருப்பதாகக் கூறி, இம்முறை NPP வெற்றியை யாராலும் தடுக்க முடியாது என தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.


வவுனியாவில் சடலமாக மீட்கப்பட்ட சுவிஸ் நாட்டவர்: இருவர் கைது

Wednesday, August 28th, 2024 at 9:26 (SLT)

வவுனியா – கனகராயன்குளம், சின்னடம்பன் பிரதேசத்தில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் சுவிஸில் இருந்து வருகை தந்த குடும்பஸ்தர் ஒருவர் கொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பில் இருவர் சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் வாசிக்க >>>

பிரபல போதைப்பொருள் வியாபாரியின் மகன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

Wednesday, August 28th, 2024 at 9:22 (SLT)

பிரபல போதைப்பொருள் வியாபாரியான ஷிரான் பாஷிக்கின் மகன் நதீன் பாஷிக் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் வாசிக்க >>>

இலங்கையின் போர்க் குற்றவாளிகளை எமது அரசாங்கம் தண்டிக்காது : அனுர

Wednesday, August 28th, 2024 at 9:20 (SLT)

இலங்கையின் உள்நாட்டுப் போரின் போது மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பாகக் குற்றம் சாட்டப்பட்ட எவரையும் தண்டிக்கத் தனது அரசாங்கம் முயலாது என்று தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க கூறியுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

ரணிலுக்கு டெலோ ஆதரவில்லை : குருசாமி சுரேந்திரன்

Wednesday, August 28th, 2024 at 9:17 (SLT)

எமது கட்சி தமிழ்ப் பொது வேட்பாளருக்கான ஆதரவு நிலைப்பாட்டில் தொடர்ந்தும் உள்ளது என்று தமிழீழ விடுதலை இயக்கத்தின் ஊடகப் பேச்சாளர் குருசாமி சுரேந்திரன் தெரிவித்துள்ளார். “தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பின் ஊடாக தமிழ்ப் பொது வேட்பாளராக அரியநேத்திரன் போட்டியிடுகின்ற நிலையில் நமது ஆதரவை வழங்கியிருந்தோம்.

மேலும் வாசிக்க >>>