கிளிநொச்சியில் விபத்து : சம்பவ இடத்திலையே ஒருவர் உயிரிழப்பு

Tuesday, August 27th, 2024 at 12:27 (SLT)

கிளிநொச்சியில் இடம்பெற்ற வீதி விபத்து குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கனகாம்பிகை குளம் பகுதியை சேர்ந்த 2 பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் – கண்டி நெடுஞ்சாலையில், கிளிநொச்சி 155ஆம் கட்டையில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

மேலும் வாசிக்க >>>

யாழில். நாய் கடித்தமைக்கு உரிய சிகிச்சை பெற தவறிய பெண் உயிரிழப்பு

Tuesday, August 27th, 2024 at 12:25 (SLT)

நாய் கடித்தமைக்கு உரிய சிகிச்சைகள் பெறாததால் , நோய் வாய்ப்பட்ட வயோதிப பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் வண்ணார் பண்ணை பகுதியை சேர்ந்த மகேந்திரன் சாந்தி (வயது 63) எனும் பெண்ணே உயிரிழந்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

சிஸ்ட்டத்தை மாற்றியவர் எமது தலைவர் சஜித் பிரேமதாச மட்டுமே : இம்ரான் Mp

Tuesday, August 27th, 2024 at 12:22 (SLT)

சிஸ்டம் சேன்ஞ்யை செய்து காட்டியவர் சஜித் பிரேமதாச என பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் தெரிவித்தார். திங்கள்கிழமை காலை ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச பங்கு கொண்ட கந்தளாய் பிரதேசத்தில் இடம்பெற்ற பிரச்சார கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

இலங்கை கடற்படைக்கு புதிய தலைமை அதிகாரி நியமனம்

Tuesday, August 27th, 2024 at 12:17 (SLT)

இலங்கை கடற்படையின் புதிய தலைமை அதிகாரியாக ரியர் அட்மிரல் காஞ்சன பனாகொட நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் 2024 ஆகஸ்ட் 16 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் ரியர் அட்மிரல் பானகொட அப்பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

முன்னாள் அமைச்சர் பௌசிக்கு 2 வருட கடூழிய கடூழிய சிறைத்தண்டனை

Tuesday, August 27th, 2024 at 12:12 (SLT)

முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசிக்கு 2 வருட கடூழிய கடூழிய சிறைத்தண்டனையும் 10 வருட காலத்திற்கு பணி இடைநிறுத்தமும் செய்து கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க இன்று உத்தரவிட்டுள்ளார். இதில் ஏ.எச்.எம் ஃபௌசி குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து, குற்றச்சாட்டின் பேரில் அவர் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்ததுடன் 4 இலட்சம் அபராதம் செலுத்துமாறும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

அனைத்து பிரஜைகளையும் மனித நேயத்துடன் நியாயமான வகையில் நடத்தும் அரசாங்கமே தேசிய மக்கள் சக்தி : அநுர குமார திசாநாயக்க

Tuesday, August 27th, 2024 at 7:26 (SLT)

தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கம் என்பது அத்தனை பிரஜைகளையும் நியாயமான வகையில் நடத்துகின்ற அரசாங்கமாகும். மனிதம் நிறைந்த அரசாங்கமாகும் என தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் ஜனாதிபதி வேட்பாளருமான அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

தற்போதைய அரசின் முட்டாள் தனத்தாலேயே மக்கள் வறியவர்களானார்கள் : சஜித்

Tuesday, August 27th, 2024 at 7:17 (SLT)

தற்போதைய அரசாங்கத்தின் முட்டாள்தனமான கொள்கைகளினால் எமது நாட்டில் இலட்சக்கணக்கான மக்கள் வறியவர்களாக மாறியுள்ளதாகவும் நாட்டை வங்குரோத்து செய்த தலைவர்களினால் இந்த நாட்டில் இலட்சக்கணக்கான மக்கள் வறுமையில் வாடுவதாகவும் எதிர்க்கட்சித் தலைவரும் ஜனாதிபதி வேட்பாளருமான சஜித் பிரேமதாச கூறுகிறார்.

மேலும் வாசிக்க >>>

மனைவியை கட்டையால் அடித்துக்கொன்ற கணவன்

Tuesday, August 27th, 2024 at 7:12 (SLT)

குடும்ப தகராறு காரணமாக கணவன் மனைவியை கட்டையால் அடித்து கொலை செய்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று (26) மாலை ஹபரணை, பலுகஸ்வெவ பிரதேசத்தில் பதிவாகியுள்ளது. 63 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்குமாறு துண்டுப்பிரசுரம் விநியோகம்

Monday, August 26th, 2024 at 12:20 (SLT)

நடைபெற உள்ள ஜனாதிபதி தேர்தலில் புறக்கணிக்குமாறு வலியுறுத்தி திருகோணமலை தபால் நிலையை வீதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.

மேலும் வாசிக்க >>>

விருந்துபசார நிகழ்விற்குச் சென்ற தனியார் வங்கியில் பணிபுரிந்து வந்த யுவதி மர்ம மரணம்

Monday, August 26th, 2024 at 12:18 (SLT)

கம்பஹா, நிட்டம்புவ பிரதேசத்தில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் பணி புரிந்து வந்த யுவதி ஒருவர் வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (25) காலை இடம்பெற்றுள்ளது.

மேலும் வாசிக்க >>>

தமிழரசு கட்சியினர் நிச்சயம் எனக்கு வாக்களிப்பார்கள் : அரியநேத்திரன் நம்பிக்கை

Monday, August 26th, 2024 at 12:14 (SLT)

தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான சிவஞானம் சிறிதரன் தமிழ் பொதுவேட்பாளருக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளதை போன்று ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களும் அவரைப் பார்த்து திருந்த வேண்டும் என தமிழ்ப் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினம்: மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்திற்கு அணிதிரளுமாறு அழைப்பு

Monday, August 26th, 2024 at 6:08 (SLT)

சர்வதேச வலிந்து காணாமல், ஆக்கப்பட்டோர் தினத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடாத்தவுள்ளார்கள்.

மேலும் வாசிக்க >>>

வரி தொடர்பான அனைத்து தகவல்களும் இன்று வெளியீடு: 900 வங்கிக் கணக்குகள் முடக்கம்

Monday, August 26th, 2024 at 6:06 (SLT)

வரி தொடர்பான அனைத்து தகவல்களும் இன்று திங்கட்கிழமை (26) வெளியிடப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

நெருக்கடியை வென்ற ஜனாதிபதியின் 2 வருடப் பணிகள்

Sunday, August 25th, 2024 at 7:21 (SLT)

நாட்டின் வரலாற்றில் மிக மோசமான பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்டெடுத்து, ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தி, முன்னேற்றப் பாதைக்கு கொண்டு வருவதற்காக கடந்த இரண்டு வருடங்களில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சிறப்பான பணிகளை ஆற்றினார்.

மேலும் வாசிக்க >>>

அரசாங்கம் மறந்தாலும் நாம் அவர்களை மறப்பதில்லை:சஜித் பிரேமதாச

Sunday, August 25th, 2024 at 7:16 (SLT)

நாட்டை பாதுகாத்த சிவில் பாதுகாப்பு துறை   உத்தியோகத்தர்களை தற்போதைய அரசாங்கம் வீட்டுக்கு அனுப்புவதற்கு  முயற்சித்த போது இந்தத் துறை குறித்து நாங்கள் உயரிய குரலில் பாராளுமன்றத்தில் குரல் எழுப்பி, இந்தத் துறையை பாதுகாத்தது ஐக்கிய மக்கள் சக்தியே. சிவில் பாதுகாப்புத்துறை ஊடாக பல அர்ப்பணிப்புகளை மேற்கொண்டு  அதிகாரிகள் அனைவருக்கும் அரச உத்தியோகத்தர்களுக்கான 24 வீத சம்பள அதிகரிப்பு மேற்கொள்ளப்படும் போது,  அவர்களுக்கும் இந்த சம்பள அதிகரிப்பு வழங்கப்படும் என்று எதிர்க்கட்சித் தலைவர்  சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>