பாரிய விபத்தில் சிக்கிய யாத்ரீகர்கள் சென்ற பேருந்து: 28 பேர் பலியான பரிதாபம்

Thursday, August 22nd, 2024 at 8:21 (SLT)

பாகிஸ்தானில் இருந்து யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, ஈரானில் விபத்திற்குள்ளானதில் 28 பேர் பலியாகினர். ஈராக் நோக்கி 51 ஷியா யாத்ரீகர்களை ஏற்றிக்கொண்டு, பேருந்து ஒன்று பாகிஸ்தானில் இருந்து கிளம்பியது. மத்திய ஈரானிய மாகாணமான யாஸ்டில் குறித்த பேருந்து இரவு வேளையில் விபத்தில் சிக்கியது. இதில் 28 பேர் கொல்லப்பட்டதாகவும், 23 பேர் காயமடைந்ததாகவும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அவர்களில் 14 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

மேலும் வாசிக்க >>>

கனடா முழுவதிலும் 100க்கும் மேற்பட்ட இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் : கோபத்தை வெளிப்படுத்திய பிரதமர் ட்ரூடோ

Thursday, August 22nd, 2024 at 8:16 (SLT)

கனடாவில் உள்ள 100க்கும் மேற்பட்ட யூத நிறுவனங்களுக்கு அச்சுறுத்தல் மின்னஞ்சல்கள் வந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. யூத நிறுவனங்களுக்கு வெடிகுண்டு அச்சுறுத்தல் மின்னஞ்சல்கள் வந்துள்ளது கனடாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் வாசிக்க >>>

புதிதாக நியமனம் பெற்ற 3 தூதுவர்களும் 2 உயர்ஸ்தானிகர்களும்

Thursday, August 22nd, 2024 at 8:09 (SLT)

இலங்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மூன்று தூதுவர்கள் மற்றும் இரண்டு உயர்ஸ்தானிகர்கள் நேற்றய தினம் புதன்கிழமை கொழும்பு கோட்டை ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் தமது நற்சான்றிதழ்களை கையளித்தனர். நற்சான்றிதழ்களைக் கையளித்த இராஜதந்திரிகளின் பட்டியல் பின்வருமாறு,

மேலும் வாசிக்க >>>

மனசாட்சியை அடகு வைக்க முடியாது நாடாளுமன்ற உறுப்புரிமையை ராஜினாமா செய்கிறேன் : தலதா அத்துக்கோரள

Thursday, August 22nd, 2024 at 8:06 (SLT)

ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுடன் இணைந்து தொடர்ச்சியாக பயணிக்க தனது மனசாட்சி இடம்கொடுக்கவில்லை எனத் தெரிவித்துள்ள, தலதா அத்துக்கோரள நேற்றைய தினம் புதன்கிழமை தனது நாடாளுமன்ற உறுப்புரிமையை இராஜினாமா செய்தார். இவ்விடயம் தொடா்பாக நாடாளுமன்றில் விசேட உரையாற்றிய அவா்,

மேலும் வாசிக்க >>>

வடக்கு, கிழக்கை மீளிணைத்து பொலிஸ், காணி அதிகாரங்களை ஒருபோதும் வழங்கவே மாட்டேன் : நாமல்

Thursday, August 22nd, 2024 at 8:01 (SLT)

“தேர்தல் காலத்தில் வடக்கில் உள்ளவர்களை ஏமாற்ற வேண்டிய தேவை எனக்குக் கிடையாது. முடிந்ததை முடியும் என்பேன், முடியாததை முடியாது என்பேன். தமிழர்களின் கலாசாரத்தைப் பாதுகாப்பேன். மொழி உரிமையையும் வழங்குவேன். ஆனால், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை மீளிணைத்துக் காணி மற்றும் பொலிஸ் அதிகாரத்தை ஒருபோதும் வழங்கமாட்டேன்.”

மேலும் வாசிக்க >>>

சஜித் ஆட்சிக்கு வந்தால் அது கோட்டாவின் ஆட்சியை போன்றதாகி விடும் : பதவி விலகிய தளதா அத்துக்கோரள எச்சரிக்கை

Wednesday, August 21st, 2024 at 12:48 (SLT)

பாராளுமன்ற உறுப்பினர் பதவியை துறந்தார் இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள பாராளுமன்றத்தில் விசேட அறிவிப்பொன்றை விடுத்த அவர், இரத்தினபுரி மாவட்ட மக்கள் தனக்களித்த ஆதரவுக்காக நணடறியையும் தெரிவித்தார். ரணிலும் சஜித்தும் இணைந்து நாட்டை முன்னேற்றக்கூடிய ஒரு திட்டத்தை தான் உட்பட்ட தரப்பு முன்வைத்தபோதும் அது சாத்தியப்படாமை குறித்து தனது உரையில் கவலை வெளியிட்டார் தலதா.

மேலும் வாசிக்க >>>

காஷ்மீரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

Wednesday, August 21st, 2024 at 12:44 (SLT)

பாகிஸ்தான் மற்றும் இந்திய எல்லைக்குட்பட்ட காஷ்மீர் பகுதியில் அடுத்தடுத்து சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கங்கள் 5.1புள்ளிகளாக பதிவாகிய நிலையில், அங்குள்ள பல கட்டிடங்கள் குலுங்கியதால் அதிர்வினை உணர்ந்த பொதுமக்கள் தங்களது வீடுகளிலிருந்து வெளியேறி வீதியில் தஞ்சம் புகுந்தனர்.

மேலும் வாசிக்க >>>

இலங்கையில் வீதி விபத்துக்களில் பறிபோன 1,417 உயிர்கள் : வெளிவந்த தகவல்

Wednesday, August 21st, 2024 at 12:32 (SLT)

இலங்கையில் இந்த வருடத்தில் இதுவரை 1,417 பேர் வீதி விபத்துக்களில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வருடாந்தம் சுமார் 1000 பேர் மோட்டார் சைக்கிள் விபத்துக்களால் உயிரிழப்பதாக போக்குவரத்து பிரிவிற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் இந்திக்க ஹப்புகொட தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

நெருக்கடியை வென்ற ஜனாதிபதியின் 2 வருடப் பணிகள்

Wednesday, August 21st, 2024 at 8:28 (SLT)

நாட்டின் வரலாற்றில் மிக மோசமான பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்டெடுத்து, ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தி, முன்னேற்றப் பாதைக்கு கொண்டு வருவதற்காக கடந்த இரண்டு வருடங்களில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சிறப்பான பணிகளை ஆற்றினார்.

மேலும் வாசிக்க >>>

நாமலின் முதலாவது தேர்தல் பிரச்சார கூட்டம் இன்று

Wednesday, August 21st, 2024 at 8:25 (SLT)

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முதலாவது ஜனாதிபதித் தேர்தல் பிரச்சார கூட்டம் இன்று (21) அனுராதபுரத்தில் நடைபெறவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்ன தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

அரசாங்கத்தின் திட்டத்தை இடைநடுவில் கைவிட்டால் நாட்டின் பொருளாதாரம் மீண்டும் வீழ்ச்சியடையும் : ஜனாதிபதி 

Tuesday, August 20th, 2024 at 7:08 (SLT)

எவராலும் தீர்க்க முடியாமல் போன பொருளாதார நெருக்கடியை தன்னால் தீர்க்க முடிந்திருந்தாலும், சரியான பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்தாமல், இந்த வேலைத்திட்டத்தை இடைநடுவில் கைவிட்டால், நாட்டின் பொருளாதாரம் மீண்டும் வீழ்ச்சியடையும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார். எனவே ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் தமது எதிர்காலம் குறித்து சிந்தித்து முடிவெடுக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

மேலும் வாசிக்க >>>

வரலாற்றுச் சிறப்புமிக்க தலதா பெரஹராவை பார்வையிட்ட ஜனாதிபதி

Tuesday, August 20th, 2024 at 7:02 (SLT)

வரலாற்றுச் சிறப்புமிக்க தலதா பெரஹராவை பார்வையிட மக்களுடன் ஜனாதிபதி இணைந்துகொண்டார். கண்டி வரலாற்றுச் சிறப்புமிக்க தலதா மாளிகையின் வருடாந்த எசல பெரஹராவின் இறுதி ரந்தோலி பெரஹரா திங்கட்கிழமை (19) இரவு நடைபெற்றதுடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் ஆயிரக்கணக்கான மக்களுடன் இணைந்து பெரஹராவைக் கண்டுகளித்தார்.

மேலும் வாசிக்க >>>

நுரெலியாவில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்பு

Tuesday, August 20th, 2024 at 6:57 (SLT)

நுவரெலியாவில் அடையாளம் தெரியாமல் காணப்பட்ட பெண் ஒருவரின் சடலத்தினை பொலிஸார் வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.

மேலும் வாசிக்க >>>

இந்தியாவில் இளம் பெண் ஒருவர் கூட்டு பாலியல் துஷ்பிரயோகம்: ஐவர் கைது

Tuesday, August 20th, 2024 at 6:53 (SLT)

இந்தியாவின் டெஹ்ராடூனில் உள்ள பேருந்து நிலையத்தில் இளம் பெண் ஒருவர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் நேற்று ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

மேலும் வாசிக்க >>>

வாக்குக் கோரி எமது கிராமத்திற்கு வந்தால் தாக்கப்படுவீர்கள்

Tuesday, August 20th, 2024 at 6:50 (SLT)

இலங்கையில் இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்கக் கோரி தமது கிராமத்துக்கு வரும் வேட்பார்கள் மற்றும் ஆதரவாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என எச்சரிக்கை விளம்பரங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மாத்தளை – நாவுல, அடவல கிராம மக்களே இவ்வாறான எச்சரிக்கை விளம்பரங்களை காட்சிப்படுத்தியுள்ளனர்.

மேலும் வாசிக்க >>>