தேர்தல் பிரசாரங்களுக்கு தேசியக் கொடியை பயன்படுத்த தடை :தேர்தல் ஆணையாளர் சமன் ஸ்ரீ ரத்நாயக்க

Sunday, August 18th, 2024 at 12:35 (SLT)

தேர்தல் பிரசாரங்களுக்கு தேசிய கொடியை பயன்படுத்தினால் சட்டம் அமுல்படுத்தப்படும் எனவும், இது தொடருமானால் இன்னும் சில நாட்களில் தேசிய கீதம் கட்சியின் பாடலாக மாறும் எனவும் தேர்தல் ஆணையாளர் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த விசாரணை முன்னேற்றத்தை உன்னிப்பாக அவதானிக்கும் அமெரிக்கா

Sunday, August 18th, 2024 at 12:31 (SLT)

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த விசாரணைகளில் ஏற்படும் முன்னேற்றங்கள் குறித்து கண்காணித்து வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு எழுதியுள்ள கடிதத்தில் மேலாண்மை மற்றும் வளங்களுக்கான அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் துணை செயலாளர் ரிச்சர்ட் ஆர் வெர்மா இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

ரஷ்யாவில் பாரிய நிலநடுக்கம்

Sunday, August 18th, 2024 at 7:32 (SLT)

ரஷ்யாவின் கிழக்கே உள்ள கடல் பகுதியில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7 ஆக பதிவானதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும் வாசிக்க >>>

வாசுதேவ நாணயக்கார அரசியலுக்கு விடைக்கொடுக்கிறார்

Sunday, August 18th, 2024 at 7:28 (SLT)

செயற்பாட்டு அரசியலில் இருந்து விலகுவதற்கு ஜனநாயக இடதுசாரி முன்னணியின் முன்னாள் தலைவரும், இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார தீர்மானித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

வெளிநாட்டில் ஜேவிபி: தேர்தல் பிரச்சாரங்கள் ஆரம்பம்

Sunday, August 18th, 2024 at 7:25 (SLT)

ஜனாதிபதித் தேர்தலில் ஜேவிபியின் அரசியல் கூட்டணியான தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அனுர குமார திஸாநாயக்கவை வெற்றி பெறச் செய்வதற்காக வெளிநாடுகளில் வசிக்கும் செயற்பாட்டாளர்கள் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக தெரியவருகிறது.

மேலும் வாசிக்க >>>

வேட்பாளர் ரணிலுக்கு வழங்கிய சிலிண்டர் சின்னத்தை இரத்து செய்யுங்கள் : மக்கள் போராட்ட சிவில் அமைப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடு

Sunday, August 18th, 2024 at 7:21 (SLT)

ஜனாதிபதி தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் ரணில் விக்கிரமசிங்கவுக்கு வழங்கப்பட்டுள்ள சிலிண்டர் சின்னத்தை இரத்து செய்து அவருக்கு பிறிதொரு சின்னத்தை வழங்குங்கள்.

மேலும் வாசிக்க >>>

இலங்கை இராஜதந்திரி ஹிமாலி அருணதிலகவுக்கு எதிரான அவுஸ்திரேலிய பெடரல் நீதிமன்றத் தீர்ப்பு : வெளிவிவகார அமைச்சு

Sunday, August 18th, 2024 at 7:17 (SLT)

இலங்கை இராஜதந்திரி ஹிமாலி அருணதிலக அவுஸ்திரேலியாவுக்கான பிரதி உயர்ஸ்தானிகராகப் பணியாற்றிய காலப்பகுதியில் அந்நாட்டு நியாய ஊழியச் சட்டத்தை மீறி செயற்பட்டிருக்கிறார் எனவும், அதற்காக அக்காலப்பகுதியில் அவரது வீட்டுப்பணிப்பெண்ணாகப் பணியாற்றிய பிரியங்கா தனரத்னவுக்கு அவர் 543,000 டொலர்களைச் செலுத்தவேண்டும் எனவும் அவுஸ்திரேலிய பெடரல் நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கின்றது.

மேலும் வாசிக்க >>>

காயப்பட்டுள்ள இந்நாட்டை சுகப்படுத்த தான் தயார்

Saturday, August 17th, 2024 at 9:21 (SLT)

இந்நாட்டின் வரலாறு புதிதாக எழுதப்படுகின்ற இந்த சந்தர்ப்பத்தில் இந்த வேலைத்திட்டத்தின் சாட்சியாளர்களாக அல்லாமல் பங்காளர்களாக மாறி நாட்டின் வெற்றிப் பயணத்தில் பங்குதாரர்களாக இணைந்துகொள்வதோடு நாட்டை வலுவூட்டும் இந்தப் பயணத்தின் தலைவர்களாக மாறி செயற்படுமாறு எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

அலி சாஹிர் மௌலானா ரணிலுக்கு ஆதரவு

Saturday, August 17th, 2024 at 9:17 (SLT)

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான அலிசாஹிர் மௌலானா எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு வழங்க இணைந்து கொண்டார்.

மேலும் வாசிக்க >>>

மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் பொதுமக்களிடம் கோரிக்கை

Saturday, August 17th, 2024 at 9:15 (SLT)

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் கட்சி எதுவாகவிருந்தாலும் மதுசாரம் மற்றும் சிகரெட்டுக்கு எதிராக செயற்படும் வேட்பாளர்களை கண்டறிந்து அவர்களை வெற்றிபெற வைக்கவேண்டும் என்று மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் பொதுமக்களிடம் கோரிக்கை முன்வைத்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

அம்பாறை வரலாற்றில் சிக்கிய பாரியளவிலான போதைப்பொருள்

Saturday, August 17th, 2024 at 9:12 (SLT)

30 இலட்சம் ரூபா பெறுமதி மிக்க ஐஸ் போதைப் பொருட்களுடன் இரண்டு சந்தேக நபர்களையும் கல்முனை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் கல்முனை விசேட அதிரடிப்படையின் புலனாய்வு பிரிவின் தகவலுக்கமைய நீண்ட நாட்களாக ஐஸ் போதைப்பொருட்களை விநியோகம் செய்து வந்த சந்தேக நபர்கள் கல்முனை மாநகரில் உள்ள உல்லாச விடுதி ஒன்றில் வைத்து நேற்று (16) மாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் வாசிக்க >>>

உலக சுகாதார ஸ்தாபனம் எம்பொக்ஸ் தடுப்பூசிகள் உற்பத்தியை விரைவுபடுத்த அறிவுறுத்தல்

Saturday, August 17th, 2024 at 9:05 (SLT)

எம்பொக்ஸ் நோய்த் தடுப்பூசிகள் உற்பத்தி செய்யும் செயற்பாடுகளை விரைவுபடுத்துமாறு உலக சுகாதார ஸ்தாபனம், விடயத்துடன் தொடர்புடைய நிறுவனங்களை அறிவுறுத்தியுள்ளது.

மேலும் வாசிக்க >>>

இலங்கை மின்சார சபையில் மறுசீரமைப்பு அவசியம் : அநுரகுமார திசாநாயக்க

Saturday, August 17th, 2024 at 9:01 (SLT)

இலங்கை மின்சார சபையில் உள்ளக மறுசீரமைப்பு அவசியம் என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.மின்சாரத்துறை தொடர்பில் இடம்பெற்ற செயலமர்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

மேலும் வாசிக்க >>>

வெள்ளைச் சீனி சிவப்பு சீனியாக மாற்றும் களஞ்சியசாலைக்கு சீல்

Saturday, August 17th, 2024 at 8:58 (SLT)

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் வெள்ளைச் சீனியில் இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் சிவப்பு சீனி மற்றும் நிறங்கள் சேர்க்கப்பட்டு சிவப்பு சீனியாக பதப்படுத்தப்படும் இடம், நுகர்வோர் அதிகாரசபையின் இரத்தினபுரி மாவட்ட அலுவலக அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது அம்பிலிபிட்டிய பிரதேசத்தில் இதனைக் கண்டுபிடித்துள்ளதாக அதிகார சபையின் ஊடகப் பேச்சாளர் அசேல பண்டார தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

மனித பாவனைக்குத் தகுதியற்ற ஆயிரம் கிலோ பருப்பு கண்டுபிடிப்பு

Saturday, August 17th, 2024 at 8:55 (SLT)

புறக்கோட்டை, ஐந்து லாம்பு சந்தி தெருவில் அமைந்துள்ள களஞ்சியசாலை ஒன்றில் இருந்து மனித பாவனைக்குத் தகுதியற்ற 1,000 கிலோ கிராம் பருப்பு கையிருப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க >>>