வெள்ளைச் சீனி சிவப்பு சீனியாக மாற்றும் களஞ்சியசாலைக்கு சீல்

Saturday, August 17th, 2024 at 8:58 (SLT)

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் வெள்ளைச் சீனியில் இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் சிவப்பு சீனி மற்றும் நிறங்கள் சேர்க்கப்பட்டு சிவப்பு சீனியாக பதப்படுத்தப்படும் இடம், நுகர்வோர் அதிகாரசபையின் இரத்தினபுரி மாவட்ட அலுவலக அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது அம்பிலிபிட்டிய பிரதேசத்தில் இதனைக் கண்டுபிடித்துள்ளதாக அதிகார சபையின் ஊடகப் பேச்சாளர் அசேல பண்டார தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

மனித பாவனைக்குத் தகுதியற்ற ஆயிரம் கிலோ பருப்பு கண்டுபிடிப்பு

Saturday, August 17th, 2024 at 8:55 (SLT)

புறக்கோட்டை, ஐந்து லாம்பு சந்தி தெருவில் அமைந்துள்ள களஞ்சியசாலை ஒன்றில் இருந்து மனித பாவனைக்குத் தகுதியற்ற 1,000 கிலோ கிராம் பருப்பு கையிருப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க >>>

நிரோஷன் திக்வெல்ல குற்றவாளியாக அறிவிப்பு

Saturday, August 17th, 2024 at 8:50 (SLT)

லங்கா பிரீமியன் தொடரில் ஊக்கமருந்து பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் இலங்கை கிரிக்கெட் வீரர் நிரோஷன் டிக்வெல்ல அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் இடை நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் வாசிக்க >>>

கனடாவில் தடைசெய்யப்பட்ட அமைப்புக்கள் பட்டியலில் புலிகள் இயக்கம்

Friday, August 16th, 2024 at 11:46 (SLT)

கனேடிய அரசாங்கத்தினால் அண்மையில் புதுப்பிக்கப்பட்ட தடைசெய்யப்பட்ட அமைப்புக்கள் அடங்கிய பட்டியலில் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் மீளவும் உள்ளடக்கப்பட்டிருக்கின்றது. கனேடிய அரசாங்கம் கடந்த 2006 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தை தடைசெய்யப்பட்ட அமைப்புக்களின் பட்டியலில் உள்ளடக்கியது. அப்பட்டியல் 5 வருடங்களுக்கு ஒருமுறை மீளாய்வுக்கு உட்படுத்தப்படும்.

மேலும் வாசிக்க >>>

இஸ்ரேல் வெற்றிபெற நான் ஆதரவை வழங்குவேன் போர் நிறுத்தம் ஹமாஸ் ஒருங்கிணையவே நேரம் கொடுக்கும் : டொனால்ட் டிரம்ப்

Friday, August 16th, 2024 at 11:19 (SLT)

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் மற்றும் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் ஆகியோர் காஸாவில் போர் நிறுத்தம் செய்வதற்கான அழைப்புகள் குறித்து அமெரிக்க குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் விமர்சித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

அவுஸ்திரேலியாவில் இலங்கையருக்கு பெருந்தொகை டொலர் அபராதம்

Friday, August 16th, 2024 at 11:16 (SLT)

அவுஸ்திரேலியாவுக்கான இலங்கையின் முன்னாள் பிரதி உயர்ஸ்தானிகர் ஹிமாலி அருணதிலாவுக்கு பெருந்தொகை டொலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.தனது வீட்டில் வீட்டுப் பணிப்பெண்ணாக பணிபுரிந்த பெண்ணுக்கு உரிய சம்பளம் மற்றும் விடுமுறையை வழங்காத குற்றத்திற்காக அவுஸ்திரேலிய பெடரல் நீதிமன்றத்தால் இந்த அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும் வாசிக்க >>>

மஹிந்த மற்றும் நாமல் அனுராதபுரத்தில்

Friday, August 16th, 2024 at 11:11 (SLT)

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட குழுவினர் இன்று (16) அனுராதபுரம் ஜய ஸ்ரீ மஹா போதியில் ஆசிர்வாதம் பெற்றனர்.

மேலும் வாசிக்க >>>

மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் ஒருவன் பலி

Friday, August 16th, 2024 at 11:05 (SLT)

இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதிய விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின் உயிரிழந்துள்ளார். ஹன்வெல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அம்புள்கம, பனாகொட வீதியின் ஜல்தர பகுதியில் நேற்று (15) இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

மேலும் வாசிக்க >>>

துப்பாக்கிச்சூட்டில் 26 வயது நபர் பலி

Friday, August 16th, 2024 at 11:03 (SLT)

இன்று அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். ஸ்ரீபுர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கெமுனுபுர, பிள்ளைர் சந்தியில் இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது.

மேலும் வாசிக்க >>>

நாட்டை கட்டியெழுப்பும் திட்டம் என்னிடம் உள்ளது : திலித் ஜயவீர

Friday, August 16th, 2024 at 10:38 (SLT)

நாட்டை கட்டியெழுப்பும் திட்டம் என்னிடம் உள்ளது என ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீர தெரிவித்துள்ளார். நாட்டை கட்டியெழுப்புவதற்கு இன மத பேதங்களை கடந்து இணைந்து கொள்ள வேண்டுமெனவும் அதனூடாக நாட்டை பாரிய வெற்றி நோக்கி நகர்த்த முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

பெண் பிரதிநிதித்துவம் இல்லாத ஜனாதிபதி வேட்பாளர் பட்டியல் துடுப்பு இல்லாத படகு போன்றது : அமைச்சர் கீதா வருத்தம்

Friday, August 16th, 2024 at 10:33 (SLT)

ஜனாதிபதித் தேர்தலில் எத்தனை வேட்பாளர்கள் போட்டியிட்டாலும் பெண்களின் பிரதிநிதித்துவம் வழங்கப்படாமை மிகவும் வருத்தமளிக்கும் விடயம் என சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

நாமலை ஜனாதிபதியாக்க இளைஞர் யுவதிகள் காத்திருப்பு : மொட்டு எம்.பி சுட்டிக்காட்டு

Friday, August 16th, 2024 at 10:29 (SLT)

இலங்கை வரலாற்றில் முதற் தடவையாக நாற்பது வயதுக்கு குறைந்த ஒருவரை ஜனாதிபதியாக நியமிக்க சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் இந்திக்க அனுருத்த தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

நாகபட்டினம் – காங்கேசன்துறை பயணிகள் கப்பல் சேவை இன்று முதல் ஆரம்பம்

Friday, August 16th, 2024 at 10:26 (SLT)

நாகபட்டினத்தில் இருந்து காங்கேசன்துறைக்கான பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை இன்று முதல் ஆரம்பமாகவுள்ளது. இந்த பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை கடந்த ஆண்டு ஒக்டோபர் 14 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட நிலையில், சீரற்ற காலநிலை காரணமாக கடந்த வருடம் ஒக்டோபர் 23 ஆம் திகதி இடைநிறுத்தப்பட்டது.

மேலும் வாசிக்க >>>

வேட்பு மனுவில் கையெழுத்திட்டார் சஜித்

Thursday, August 15th, 2024 at 11:20 (SLT)

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும், தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச இன்று வியாழக்கிழமை (15) தனது வேட்பு மனுவில் கையெழுத்திட்டார்.


கொல்கத்தாவில் பெண் மருத்துவர் பாலியல் வன்முறையின் பின்னர் கொலை எதிர்ப்பு தெரிவித்து இரவில் பெண்கள் பெரும் ஆர்ப்பாட்டம் : நாங்கள் கால்நடைகளை விட பெறுமதியற்றவர்கள் என வேதனை

Thursday, August 15th, 2024 at 11:17 (SLT)

கொல்கத்தா அரச மருத்துவமனையில் பெண் மருத்துவர் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரக்கணக்கான பெண்கள் நேற்று இரவு ஆர்ப்பாட்ட போராட்டங்களை முன்னெடுத்தனர். ரீக்லைட் என்ற பேரணியில் ஆயிரக்கணக்கான பெண்கள் கலந்துகொண்டனர்.

மேலும் வாசிக்க >>>