பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு சென்ற இளைஞன் மீது கொடூரத் தாக்குதல்

Monday, August 5th, 2024 at 7:37 (SLT)

அராலி பகுதியில் 3ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்ற பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய இளைஞனை மறித்து கும்பல் ஒன்று வாளை காட்டி மிரட்டியதுடன் கம்பிகளால் தாக்குதலும் நடாத்தியுள்ளது.

மேலும் வாசிக்க >>>

ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளர் யார்?: வவுனியாவில் இன்று முடிவு

Monday, August 5th, 2024 at 7:32 (SLT)

ஜனாதிபதி தேர்தலில், தமிழ் தேசியப் பொதுக்கட்டமைப்பின் சார்பில் களமிறக்கப்படும் பொதுவேட்பாளர் குறித்து இன்று முடிவெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க >>>

இலங்கையர்கள் கௌரவமாக வாழும் சூழலை தோற்றுவிப்பேன் இன,மத ,பேதமின்றி அனைவரும் ஒன்றுபட வேண்டும் :ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீர

Monday, August 5th, 2024 at 7:27 (SLT)

இன,மத வேறுபாடுகள் ஏதும் இல்லாத வகையில் சிறந்த வினைத்திறனான அரசியல் கட்டமைப்பை தோற்றுவிப்பேன்.இலங்கையர்கள் அனைவரும் கௌரவமாக வாழும் சூழலை உருவாக்குவேன்.எமது நாட்டு மக்கள் பாவம் அவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்பதற்காகவே அரசியலில் பிரவேசித்துள்ளேன்.

மேலும் வாசிக்க >>>

குழந்தை பால் குடிக்க மறுத்தமையால் கைகால்களை திருகினேன்

Sunday, August 4th, 2024 at 19:32 (SLT)

குழந்தை பால் குடிக்க மறுத்து அடம்பிடிப்பதால் , குழந்தையின் கைகால்களை திருகியதாக தாயார் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் அளவெட்டி பகுதியை சேர்ந்த சசிரூபன் நிகாஸ் என்ற ஒன்றரை மாத குழந்தையொன்று நேற்று உயிரிழந்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

இத்தாலியில் படகு மூழ்கியதில் இரண்டு புலம்பெயர்ந்தோர் பலி

Sunday, August 4th, 2024 at 19:28 (SLT)

இத்தாலிய நகரமான சிசிலியின் தென் கிழக்கே 17 மைல் தொலைவில் 30 க்கும் மேற்பட்டவர்களை ஏற்றிச் சென்ற படகு மூழ்கியதில் இரண்டு புலம்பெயர்ந்தோர் இறந்தனர். மற்றும் ஒருவரைக் காணவில்லை என்று இத்தாலிய கடலோர காவல் படை தெரிவித்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

ரணில் விக்கிரமசிங்கவிற்கும் பசில் ராஜபக்ஷவிற்கும் இடையில் விரிசல் காரணத்தினை வெளிப்படுத்திய நாமல்

Sunday, August 4th, 2024 at 19:24 (SLT)

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் பசில் ராஜபக்ஷவிற்கும் இடையில் விரிசல் வரக் காரணம் எஸ்.எம்.சந்திரசேனவிற்காக நிபந்தனையற்ற விதத்தில் ஆதரவு வழங்கியமையே என நாமல் ராஜபக்ஷ கூறுகிறார்.

மேலும் வாசிக்க >>>

குவைத்தில் கைதான இலங்கையர்கள் விடுவிப்பு

Sunday, August 4th, 2024 at 10:21 (SLT)

குவைத்தில் கடந்த 2ஆம் திகதி கைது செய்யப்பட்ட இசைக்கலைஞர்கள் உள்ளிட்ட இலங்கையர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.அந்நாட்டிலுள்ள இலங்கைத் தூதரகத்தின் தலையீட்டினால் குறித்த குழுவினர் நேற்று (03) இரவு விடுவிக்கப்பட்டதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் நால்வர் பலி

Sunday, August 4th, 2024 at 10:17 (SLT)

இன்று (04) அதிகாலை இடம்பெற்ற பல துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களும் இரண்டு பெண்களும் உயிரிழந்தனர்.அம்பாறை நாமல் ஓயா பகுதியில் உள்ள வீடொன்றில் வைத்து அதிகாலை 2.45 மணியளவில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் வாசிக்க >>>

யாழில் விபத்து பெண் உயிரிழப்பு

Saturday, August 3rd, 2024 at 20:50 (SLT)

யாழ்ப்பாணம், சுன்னாகம் பகுதியில் இன்று சனிக்கிழமை (03) இடம்பெற்ற வீதி விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை வீதியில் சுன்னாகம் சந்திக்கு அருகில் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த இரு பெண்களை ஹை-ஏஸ் ரக வாகனம் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

மேலும் வாசிக்க >>>

வான் சாகசத்தில் ஈடுபட்ட இரு இராணுவ வீரர்கள் விபத்தில் சிக்கி காயம்

Saturday, August 3rd, 2024 at 20:46 (SLT)

வெல்லவாய ஊவா குடாஓயா கமாண்டோ ரெஜிமெண்ட் பயிற்சி நிலையத்தில் இன்று சனிக்கிழமை (03) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வான் சாகச நிகழ்வின் போது இடம்பெற்ற விபத்தில் இரண்டு இராணுவ வீரர்கள் காயமடைந்துள்ளனர்.

மேலும் வாசிக்க >>>

அடுத்த ஆண்டு முதல் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு திட்டம்: ரணில்

Saturday, August 3rd, 2024 at 20:41 (SLT)

இளைஞர்களுக்கு தொழில் வழங்கும் வேலைத்திட்டம் அடுத்த வருடம் முதல் ஆரம்பிக்கப்படும் எனவும், அதற்காக அரச மற்றும் தனியார் துறைகளில் புதிய தொழில் வாய்ப்புகளை உருவாக்குவதே தமது நோக்கமாகும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

கழிவறையில் குழந்தை பெற்றெடுத்த 16 வயது பாடசாலை மாணவி

Saturday, August 3rd, 2024 at 9:43 (SLT)

ஆந்திர மாநிலம் கோதப்பட்டினத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் 16 வயது சிறுமிக்கு பிறந்த குழந்தை உயிரிழந்ததுள்ளது. மேலும் யாருக்கும் தெரியப்படுத்தாமல் பல மணிநேரம் பிரசவ வலியால் துடித்த மாணவி தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் வாசிக்க >>>

பிலிப்பைன்ஸில் நிலநடுக்கம் – ரிச்டரில் 6.8 ஆக பதிவு

Saturday, August 3rd, 2024 at 9:38 (SLT)

பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு கடற்கரை பகுதியில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இன்று அதிகாலை ஏற்பட்ட இந்த நிலநடுக்கமானது ரிச்டர் அளவில் 6.8 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியீயல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

தேர்தல் தொடர்பில் 45 முறைப்பாடுகள் : பெப்ரல் அமைப்பு

Saturday, August 3rd, 2024 at 9:36 (SLT)

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் 45 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது. பொது வளங்களை துஷ்பிரயோகம் செய்தல், நியமனங்கள் மற்றும் இடமாற்றங்கள் போன்ற சம்பவங்கள் தொடர்பில் அதிக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி குறிப்பிட்டார்.

மேலும் வாசிக்க >>>

இலங்கை கடற்படையினரின் ரோந்து கப்பல் மோதி உயிரிழந்த இந்திய மீனவரின் சடலம் ஒப்படைப்பு

Saturday, August 3rd, 2024 at 9:31 (SLT)

இராமேஸ்வரத்திலிருந்து கடற்றொழிலுக்குச் சென்ற இலங்கை கடற்படை ரோந்து படகு மோதியதில் மீன்பிடி படகு நடுக்கடலில் மூழ்கியதில் சடலமாக மீட்கப்பட்ட கடற்றொழிலாளரின் உடல் மற்றும் உயிருடன் மீட்கப்பட்ட இரண்டு கடற்றொழிலாளர்கள் இன்று (3) அதிகாலை கடல் வழியாக இராமேஸ்வரம் துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

மேலும் வாசிக்க >>>