இலங்கையில் கடந்த இரண்டு நாட்களில் 5 சிறுமிகளுக்கு ஏற்பட்ட கொடூரம்

Saturday, August 3rd, 2024 at 9:27 (SLT)

அனுராதபுரத்தில் கடந்த இரண்டு நாட்களில் 5 சிறுமிகள் வன்புணர்வு மற்றும் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 30 மற்றும் 31ஆம் திகதிகளில் இடம்பெற்ற இந்த சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக அனுராதபுரம் பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

நிகழ்நிலைக் காப்பு திருத்த சட்டமூலம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல்

Friday, August 2nd, 2024 at 10:41 (SLT)

நிகழ்நிலைக் காப்பு திருத்த சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும் பின்னர் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்கும் கடந்த 22 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் கிடைத்தது.

மேலும் வாசிக்க >>>

பெருந்தோட்ட மக்களுக்காக புதிய கிராமங்களை நிர்மானிக்கத் திட்டம்: ரஞ்சித் சியம்பலாபிட்டிய

Friday, August 2nd, 2024 at 10:28 (SLT)

சுமார் 200 வருட கால வரலாற்றைக் கொண்ட பெருந்தோட்ட மக்களே, உரிமை இல்லாத காணிகளினால் அதிகம் பாதிக்கப்படுவதாக பெருந்தோட்ட நிறுவன மறுசீரமைப்பு அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

316 ஆக உயர்ந்துள்ள உயிரிழப்புக்கள் : வயநாடு நிலச்சரிவின் மீட்பு பணிகள் தீவிரம்

Friday, August 2nd, 2024 at 10:24 (SLT)

இந்தியா, கேரளா வயநாட்டில் கடந்த செவ்வாய்க்கிழமையன்று பெய்த கன மழையால் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 316ஆக உயர்ந்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

பொதுஜன பெரமுன தனித்து வேட்பாளரை களமிறக்குவது சிறந்தது : ஐக்கிய குடியரசு முன்னணி

Friday, August 2nd, 2024 at 10:20 (SLT)

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஸ்ரீ லங்கா பொதுஜன ஜனாதிபதி தேர்தலில் தனித்து வேட்பாளரை களமிறக்குவது சிறந்தது.நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளிய ராஜபக்ஷர்களுக்கு நாட்டு மக்கள் தகுந்த பாடத்தை இம்முறை கற்பிப்பார்கள் என ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும்,பாராளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

இந்திய மீனவர் உயிரிழப்பு விவகாரம்: டில்லியில் உள்ள இலங்கை பதில் உயர்ஸ்தானிகரை அழைத்து கடும் எதிர்ப்பை வெளிப்படுத்திய இந்தியா

Friday, August 2nd, 2024 at 7:42 (SLT)

இந்திய மீனவரொருவர் உயிரிழந்து, பிறிதொருவர் காணாமல்போன சம்பவம் தொடர்பில் டில்லியில் உள்ள இலங்கை பதில் உயர்ஸ்தானிகரிடம் தமது வலுவான எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சு, மீனவர் விவகாரத்தை மனிதாபிமான அணுகுமுறையுடன் கையாளவேண்டும் எனும் இருநாடுகளுக்கு இடையிலான புரிந்துணர்வை இறுக்கமாகப் பின்பற்றவேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளது.

மேலும் வாசிக்க >>>

மஹிந்த ராஜபக்ஷ பூமியை முத்தமிட்டு நாட்டை அழித்துவிட்டார்; நான் அதிகாரத்துக்கு வந்தால் நாட்டு வளங்களில் ஒரு சதமேனும் விற்பனை செய்வதற்கு இடமளிக்கமாட்டேன் : விஜேதாச ராஜபக்ஷ்

Friday, August 2nd, 2024 at 7:36 (SLT)

நான் அமைச்சரவையில் இருந்திருக்காவிட்டால் 2024ஆம் ஆண்டிலும் ஜனாதிபதி தேர்தல் இடம்பெற்றிருக்காது. அது தொடர்பான தகவல்களை பிரிதொரு சந்தர்ப்பத்தில் வெளிப்படுத்துவேன். நாட்டுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட எந்த பிரேரணைக்கும் நான் பங்காளியாகவில்லை. அதனாலே பலதடவைகள் அமைச்சரவையில் இருந்து ஒதுக்கப்பட்டேன். மஹிந்த ராஜபக்ஷ் பூமியை முத்தமிட்டு நாட்டை அழித்துவிட்டார். நான் அதிகாரத்துக்கு வந்தால் நாட்டு வளங்களில் ஒரு சதமேனும் விற்பனை செய்வதற்கு இடமளிக்கமாட்டேன் என்ற உறுதியை வழங்குகிறேன் என தேசிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் விஜேதாச ராஜபக்ஷ் தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

அம்பாறையில் ஐஸ் போதைப் பொருளுடன் தாயும் மகனும் கைது

Thursday, August 1st, 2024 at 10:19 (SLT)

ஐஸ் போதைப் பொருளுடன் கைதான தாய் மற்றும் மகன் உள்ளிட்டோரிடம் மேலதிக விசாரணைகளை இறக்காமம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

மேலும் வாசிக்க >>>

வெளிநாட்டில் தலைமறைவாகியிருந்த கஞ்சிபானை இம்ரான் மற்றும் லொக்கு பட்டி கைது

Thursday, August 1st, 2024 at 10:15 (SLT)

கிளப் வசந்தவின் கொலையின் மூளையாக கருதப்படும் பாதாள உலக தலைவர் கஞ்சிபானை இம்ரான் மற்றும் பாதாள உலக உறுப்பினர் லொக்கு பட்டி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் வாசிக்க >>>

இலங்கை கடற்பரப்பில் விபத்து இந்திய மீனவர் உயிரிழப்பு ஒருவரைக் காணவில்லை

Thursday, August 1st, 2024 at 10:11 (SLT)

யாழ்ப்பாணம், நெடுந்தீவு கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்ய முற்பட்போது, ஏற்பட்ட விபத்தில் இந்திய மீனவர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் காணாமல் போயுள்ளார். 

மேலும் வாசிக்க >>>

மத்திய வங்கி ஆளுநர் மற்றும் விமானப்படை தளபதிக்கு நோட்டீஸ்: தகவல்களை வழங்க மறுப்பு

Thursday, August 1st, 2024 at 6:36 (SLT)

தகவல் அறியும் சட்டத்தின் கீழ் இலங்கை மத்திய வங்கி ஆளுநர் மற்றும் விமானப்படை தளபதியிடம் “அத“ செய்தித்தாளின் ஊடகவியலாளர் ராகுல் சமந்த ஹெட்டியாராச்சி கோரியிருந்த விபரங்களை வழங்காத காரணம் தொடர்பில் அவர்கள் இருவருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க >>>

நெல்லியடியில் 9 வயதுச் சிறுமியை துஷ்பிரயோகம் செய்த 33 வயதுடைய குடும்பஸ்தர் கைது

Thursday, August 1st, 2024 at 6:32 (SLT)

கடந்த சில தினங்களுக்கு முன்னர், நெல்லியடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நெல்லியடி – துன்னாலை பகுதியில் 9 வயதுச் சிறுமி ஒருவரை கடத்திச் சென்று துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் கீழ் சந்தேகநபர் ஒருவர் புதன்கிழமை (31) பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

“ஹமாஸ்” தலைவர் படுகொலை : ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 03 விசேட குழுக்கள் நியமிப்பு

Thursday, August 1st, 2024 at 6:29 (SLT)

“ஹமாஸ்” தலைவர் படுகொலையின் காரணமாக ஈரான் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் உலக நாடுகளில் ஏற்படக்கூடிய பாதுகாப்பு மற்றும் பொருளாதார அழுத்தங்களை எதிர்கொள்வதற்கு முன் ஆயத்தமாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 03 விசேட குழுக்களை நியமிதுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

பிரச்சினைகள் தொடர்பில் அறிவிக்க விசேட தொலைபேசி இலக்கங்கள் விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு

Wednesday, July 31st, 2024 at 11:29 (SLT)

தென்னை பயிர்ச்செய்கையில் வெள்ளை ஈ நோய் உள்ளிட்ட ஏதேனும் பிரச்சினைகள் தொடர்பில் விவசாயிகளுக்கு நேரடியாக அறிவிக்கக்கூடிய தொலைபேசி இலக்கத்தை வழங்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர, தென்னைச் செய்கை சபைக்கு இந்த ஆலோசனையை வழங்கியுள்ளார்

மேலும் வாசிக்க >>>

வித்தியா படுகொலை வழக்கு மேன்முறையீட்டு மனு விசாரணைக்கு திகதி குறிப்பு

Wednesday, July 31st, 2024 at 11:26 (SLT)

2015ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் சிவலோகநாதன் வித்தியா சிறுமி படுகொலை செய்யப்பட்ட வழக்கில், மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஆறு பிரதிவாதிகளின் மேன்முறையீட்டு மனுவை எதிர்வரும் வருடம் ஜனவரி மாதம் 20 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உயர் நீதிமன்றம் திகதி நிர்ணயித்துள்ளது.

மேலும் வாசிக்க >>>