கட்டுப்பணத்தை செலுத்தினார் சஜித்

Wednesday, July 31st, 2024 at 11:23 (SLT)

ஐக்கிய மக்கள் சக்தியின் சாா்பில் ஜனாதிபதித் தோ்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வகையில் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ இன்று தேர்தல்கள் ஆணைக்குழுவில் கட்டுப்பணம் செலுத்தியுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

என்னையும் வந்து சந்தித்தார்கள்:நாமல் ராஜபக்ஷ

Wednesday, July 31st, 2024 at 11:21 (SLT)

ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக சென்ற சிலர் தனது வீடுகளுக்கு வந்து ஆதரவு தெரிவித்ததாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். கொழும்பில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே நாமல் ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

முல்லைத்தீவில் தீப்பிடித்து எரிந்த கடைத்தொகுதிகள் அதிகாலையில் அசம்பாவிதம்

Tuesday, July 30th, 2024 at 12:11 (SLT)

முல்லைத்தீவு நகர்பகுதியில் அமைந்துள்ள பிரதேச சபையின் பொதுச்சந்தை கட்டத்தில் அமைந்துள்ள வணிக நிலையங்கள் இரண்டு தீ பிடித்து எரிந்து சேதமடைந்துள்ளன. குறித்த தீவிபத்து சம்பவம் இன்று அதிகாலை வேளை இடம்பெற்றுள்ளது.

மேலும் வாசிக்க >>>

மனித நேயத்திற்கு முதலிடம் வழங்க வேண்டும் : சஜித் பிரேமதாச

Tuesday, July 30th, 2024 at 12:05 (SLT)

இந்த பிரபஞ்சம் திட்டமானது நாட்டில் படித்தவர்களை உருவாக்கி, கல்வியை பலப்படுத்தி, கற்றறிந்தோர் தலைமுறையை உருவாக்க வழிகோலுகிறது. சாட்சிகள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் முடிவுகளை எட்டும் மனப்பாங்கு மாற்றம் இதனால் விருத்தியடையும். நாட்டில் கல்வியறிவு பெற்ற சமூகம் உருவாக வேண்டும். கற்றறியாதோர் சமூகத்தில் கற்றறியா ஆட்சியாளர்கள் தோன்றுவார்கள். அறிவை அடிப்படையாகக் கொண்டமையாத தீர்மானங்களை எடுப்பர். இத்தகையவர் எடுத்த முட்டாள்தனமான தீர்மானங்களை நம்மக்கள் இன்று அனுபவித்துள்ளனர் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

தோட்டப் பாடசாலைகளை மேம்படுத்த அமைச்சரவை அனுமதி

Tuesday, July 30th, 2024 at 12:03 (SLT)

இந்திய அரசின் உதவியுடன் தோட்டப் பாடசாலைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

மேலும் வாசிக்க >>>

நுவரெலியா நீதிமன்றம் ஜீவன் தொண்டமானுக்கு விடுத்துள்ள அறிவிப்பு

Tuesday, July 30th, 2024 at 11:57 (SLT)

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சருமான திரு.ஜீவன் தொண்டமான் மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள் மூவர் நேற்று (29) நுவரெலியா நீதிவான் நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளதாக நுவரெலியா தலைமையக பொலிஸ் பரிசோதகர் பிரேமலால் ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

கேரளா வயநாடு அருகே ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 41ஆக உயர்வு: மீட்பு பணிகளுக்காக கண்ணூரிலிருந்து ராணுவம் வரவழைப்பு

Tuesday, July 30th, 2024 at 11:53 (SLT)

‌‌கேரளாவின் வயநாடு அருகே ஏற்பட்ட பெரும் மண்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 41-ஆக உயர்ந்துள்ளது. கேரளா வயநாடு மாவட்டம் முண்டக்கை, சூரல்மலை உள்ளிட்ட 3 இடங்களில் இன்று அதிகாலை பயங்கர மண்சரிவு ஏற்பட்டது. வயநாடு நிலச்சரிவு மீட்பு பணிகளுக்காக கண்ணூரிலிருந்து ராணுவம் வரவழைக்கப்பட்டது.மண்சரிவில் சிக்கி காயம் அடைந்த 50-க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் வாசிக்க >>>

ரணில் ராஜபக்சாக்களுடன் இணைந்து போட்டியிடவேண்டுமா? கருத்துக்கணிப்பில் 76 வீதமானவர்கள் எதிர்ப்பு

Tuesday, July 30th, 2024 at 11:47 (SLT)

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ரணில்விக்கிரமசிங்க ராஜபக்சாக்களுடன் இணைந்து போட்டியிடுவதை விரும்பவில்லை என கருத்துக்கணிப்பொன்றில் பங்கெடுத்த 76 வீதமான மக்கள் தெரிவித்துள்ளனர். டெய்லிமிரர் மேற்கொண்ட கருத்துக்கணிப்பின் போது இது தெரியவந்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

நாட்டில் மூன்றாவது உள்நாட்டுப் போர் ஏற்படுவதைத் தடுக்க முடியாது:வஜிர அபேவர்தன

Tuesday, July 30th, 2024 at 11:41 (SLT)

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் சம்பிரதாய அரசியல் சித்தாந்தங்களை பின்பற்றினால் நாட்டில் மீண்டும் உள்நாட்டு யுத்தம் ஏற்படும் அபாயம் இருப்பதாகவும், அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் அதற்கு சம்பந்தப்பட்ட தரப்பினர் பொறுப்பேற்க வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன சுட்டிக்காட்டினார்.

மேலும் வாசிக்க >>>

திருகோணமலையில் சுற்றுலா பயணிகள் மீது தாக்குதல் : மூவர் கைது

Tuesday, July 30th, 2024 at 11:36 (SLT)

திருகோணமலை, குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புறாமலை தீவுக்கு செல்லும் உள்ளூர் பயணிகள் மீது தாக்குதல் நடத்திய படகு சேவை உரிமையாளர்கள் மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.தெஹிவளை பகுதியில் இருந்து புறா தீவுக்கு சென்ற சுற்றுலாப் பயணிகள் மீது தாக்குதல் நடத்திய 60, 40 மற்றும் 45 வயது படகு உரிமையாளர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் வாசிக்க >>>

ஜனாதிபதிக்கு ஆதரவளிக்க மொட்டுவின் ஒரு குழு தீர்மானம்

Tuesday, July 30th, 2024 at 11:33 (SLT)

மொட்டுவின் அரசியல் குழுவினால் கொண்டுவரப்பட்ட யோசனைக்கு எதிர்ப்பு தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அமைச்சர்கள் குழு நேற்று (29) இரவு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்துள்ளது.எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிக்க இவர்கள் தீர்மானித்துள்ளனர்.

மேலும் வாசிக்க >>>

வத்தளையில் 3 மாடி வீட்டில் பாரிய தீ : ஒருவர் உயிரிழப்பு

Tuesday, July 30th, 2024 at 11:30 (SLT)

வத்தளை மாடாகொடையில் உள்ள மூன்று மாடி கொண்ட  வீடொன்றில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 90 வயதுடைய வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.      

மேலும் வாசிக்க >>>

எட்டம்பிட்டிய பகுதியில் 12 பேர் மீது குளவி கொட்டு

Tuesday, July 30th, 2024 at 11:24 (SLT)

எட்டம்பிட்டிய பகுதியில் குளவிக்கொட்டுக்கு இலக்காகி 12 பேர் எட்டம்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த சம்பவம் நேற்று திங்கட்கிழமை (29) மாலை இடம் பெற்றுள்ளது.

மேலும் வாசிக்க >>>

ஏழு வயது சிறுமி துப்பாக்கி வெடித்து காயம்

Tuesday, July 30th, 2024 at 11:18 (SLT)

மாத்தளை, மக்குலுகஸ்வெவ பகுதியில் ஏழு வயதுடைய சிறுமி ஒருவர் துப்பாக்கி வெடித்து காயமடைந்து வைத்தியாசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் வாசிக்க >>>

ஜனாதிபதி வேட்பாளருக்கான ஆதரவு குறித்து தமிழரசுக் கட்சியின் முடிவு

Monday, July 29th, 2024 at 10:52 (SLT)

சமஷ்டியை வலியுறுத்தும் வேட்பாளருக்கு ஆதரவு வழங்குவது பற்றி தமிழரசுக் கட்சி பரிசீலிக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் (S.Sritharan) தெரிவித்துள்ளார்.கிளிநொச்சியில் நேற்று (28.07.2024) ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

மேலும் வாசிக்க >>>