ஓகஸ்ட் முதல் வாகன இறக்குமதிக்கு அனுமதி: ஷெஹான் சேமசிங்க

Monday, July 29th, 2024 at 10:48 (SLT)

வாகன இறக்குமதிக்கான அனுமதி எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்தில் வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். இதன்படி, வர்த்தகம் மற்றும் போக்குவரத்துக்கு தேவையான வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு ஆரம்ப கட்டத்தில் அனுமதி வழங்கப்படும் என இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

ஆற்றில் அடையாளம் தெரியாத சடலம் மீட்பு

Monday, July 29th, 2024 at 10:44 (SLT)

கிந்திகொட பிரதேசத்திலுள்ள ஆற்றில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.சீதுவ பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று (28) சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க >>>

ஹபராதுவ பகுதியில் துப்பாக்கிச்சூடு

Monday, July 29th, 2024 at 10:41 (SLT)

ஹபராதுவ – ஹருமல்கொட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று (28) இரவு இருவரை குறிவைத்து துப்பாக்கியால் சுட்டுவிட்டு மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் வாசிக்க >>>

தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிவித்தல்

Monday, July 29th, 2024 at 10:38 (SLT)

சனாதிபதித் தேர்தல் 2024 பெயர் குறித்த நியமனப்பத்திரங்களைப் பொறுப்பேற்றல், வைப்புப் பணம் செலுத்துதல் மற்றும் வாக்கெடுப்பு தொடர்பாக இலங்கை தேர்தல் ஆணைக்குழு சார்பாக அதன் தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல்.சத்நாயக்க அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

சிறுவர்கள் மீதான பாலியல் துஷ்பிரயோகம் அதிகரிப்பு: கொழும்பு மாவட்டம் முதலிடம்

Monday, July 29th, 2024 at 7:22 (SLT)

இந்த ஆண்டில் ஜனவரி முதல் ஜூன் வரையான ஆறு மாத காலப்பகுதியில் சிறுவர்கள் மீதான பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பில் 290 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.

மேலும் வாசிக்க >>>

ஜனாதிபதி வேட்பாளர் யார்?: மொட்டுக் கட்சி இன்று தீர்மானம்

Monday, July 29th, 2024 at 7:19 (SLT)

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் யார்? என்பதை தீர்மானிக்க கட்சியின் அரசியல் சபை இன்று (29ஆம் திகதி) கூடுகின்றது.

மேலும் வாசிக்க >>>

உயர்நீதிமன்ற தீர்ப்பை ஜனாதிபதி, பிரதமர் விமர்சிப்பது தவறானதொரு எடுத்துக்காட்டு : ஜீ.எல்.பீரிஸ்

Monday, July 29th, 2024 at 7:02 (SLT)

பாராளுமன்ற சிறப்புரிமைக்குள் இருந்துக் கொண்டு உயர்நீதிமன்ற தீர்ப்பை விமர்சிப்பது பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும்.பொலிஸ்மா அதிபருக்கு நீதிமன்றம் விதித்துள்ள இடைக்காலத் தடையுத்தரவால் ஜனாதிபதித் தேர்தலுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

குறைக்கப்படும் தரங்களின் எண்ணிக்கை 17 வயதுக்குள் பாடசாலை கல்வியை முடிக்க கல்வி அமைச்சு திட்டம்

Sunday, July 28th, 2024 at 12:09 (SLT)

2025 ஆம் ஆண்டின் முதல் தவணை முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்த முன்மொழிவுகளின் படி, பாடசாலையின் தரங்களின் எண்ணிக்கை 13 இல் இருந்து 12 ஆக குறைக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. அதன் படி, ஒவ்வொரு மாணவர்களும் 17 வயதிற்குள் பாடசாலை கல்வியை முடிக்க வேண்டும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

சிங்கள மக்களின் வாக்குகளுடன் மாத்திரம் தேர்தலில் வெற்றிபெற விரும்பவில்லை : அனுர

Sunday, July 28th, 2024 at 12:07 (SLT)

ஐக்கிய அரசாங்கமொன்றை ஏற்படுத்துவதற்கு முஸ்லீம்கள் தேசிய மக்கள் சக்தியுடன் ஒன்றிணையவேண்டும் என ஜேவிபியின் தலைவர் அனுரகுமார திசநாயக்க வேண்டுகோள் விடுத்துள்ளார். தேசிய மக்கள் சக்தியின் முஸ்லீம் சகோதரத்துவத்தின் காலி பேரணியில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

ஜனாதிபதி தேர்தலுக்காக தேர்தல் ஆணையாளர் கோரும் பணத்தை வழங்க திறைசேரி தயார்: ரஞ்சித் சியம்பலாபிட்டிய

Sunday, July 28th, 2024 at 11:54 (SLT)

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்காக தேர்தல் ஆணையாளர் கோரும் பணத்தை வழங்க திறைசேரி தயார் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.கடந்த பாதீட்டு திட்டத்தில் தேர்தல் நடவடிக்கைகளுக்காக 10 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டதாகவும், தேர்தல் ஆணையாளர் அலுவலகம் ஏறக்குறைய 08 பில்லியன் ரூபா மதிப்பீட்டை அனுப்பியுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

கால்பந்தாட்ட மைதானம் மீது ஏவுகணைத் தாக்குதல்

Sunday, July 28th, 2024 at 11:51 (SLT)

இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள கோலன் மலைப்பகுதியில் அமைந்துள்ள கால்பந்தாட்ட மைதானம் மீது நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் சிறுவர்கள் இளைஞர்கள் உள்ளிட்ட 12 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. லெபனானின் ஹெஸ்புல்லா கெரில்லா அமைப்பு இந்த தாக்குதலை நடத்தியதாக இஸ்ரேல் குற்றம் சாட்டுகிறது.

மேலும் வாசிக்க >>>

வீதி விபத்துக்களால் நால்வர் பலி

Sunday, July 28th, 2024 at 11:49 (SLT)

கடந்த 24 மணி நேரத்தில், நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற வீதி விபத்துகளில் பெண்ணொருவர் உட்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று (27) ரத்கம, பொலன்னறுவை, மாலபே மற்றும் ஜாஎல பொலிஸ் பிரிவுகளில் இந்த விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன.

மேலும் வாசிக்க >>>

யாழில் விபத்தில் குடும்பப்பெண் உயிரிழப்பு : இருவர் விளக்கமறியலில் மேலும் இருவர் கைது

Saturday, July 27th, 2024 at 12:24 (SLT)

மானிப்பாய் பொலில் பிரிவிற்குட்பட்ட கட்டுடை சந்தியில் நேற்றையதினம் ஹயேஸ் வாகனமும் மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானதில், மோட்டார் சைக்கிளில் வந்த குடும்பப்பெண் ஸ்தலத்தில் உயிரிழந்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

மதுபானசாலைகளை திறப்பதற்கு இடமளிக்கப் போவதில்லை : பந்துல

Saturday, July 27th, 2024 at 12:22 (SLT)

ஹோமாகம பிரதேச செயலாளரின் எதிர்ப்புக்கு மத்தியில் ஹோமாகம பிடிபன பகுதியில் திறக்கப்பட்ட இரண்டு புதிய மதுபானசாலைகள் மூடப்பட்டுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

முல்லைத்தீவில் கமத்தொழில் அமைப்பின் செயலாளர் மீது துப்பாக்கி சூடு

Saturday, July 27th, 2024 at 12:19 (SLT)

முல்லைத்தீவில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் குடும்பஸ்தர் ஒருவர் காயமடைந்துள்ளார். கமக்கார அமைப்பின் செயலாளரான முல்லைத்தீவு – கல்விளான் பகுதியைச் சேர்ந்த செல்லையா கிருஸ்ணராஜா (வயது – 42) என்பவர் மீதே குறித்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க >>>