யாழில் விபத்தில் குடும்பப்பெண் உயிரிழப்பு : இருவர் விளக்கமறியலில் மேலும் இருவர் கைது

Saturday, July 27th, 2024 at 12:24 (SLT)

மானிப்பாய் பொலில் பிரிவிற்குட்பட்ட கட்டுடை சந்தியில் நேற்றையதினம் ஹயேஸ் வாகனமும் மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானதில், மோட்டார் சைக்கிளில் வந்த குடும்பப்பெண் ஸ்தலத்தில் உயிரிழந்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

மதுபானசாலைகளை திறப்பதற்கு இடமளிக்கப் போவதில்லை : பந்துல

Saturday, July 27th, 2024 at 12:22 (SLT)

ஹோமாகம பிரதேச செயலாளரின் எதிர்ப்புக்கு மத்தியில் ஹோமாகம பிடிபன பகுதியில் திறக்கப்பட்ட இரண்டு புதிய மதுபானசாலைகள் மூடப்பட்டுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

முல்லைத்தீவில் கமத்தொழில் அமைப்பின் செயலாளர் மீது துப்பாக்கி சூடு

Saturday, July 27th, 2024 at 12:19 (SLT)

முல்லைத்தீவில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் குடும்பஸ்தர் ஒருவர் காயமடைந்துள்ளார். கமக்கார அமைப்பின் செயலாளரான முல்லைத்தீவு – கல்விளான் பகுதியைச் சேர்ந்த செல்லையா கிருஸ்ணராஜா (வயது – 42) என்பவர் மீதே குறித்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க >>>

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் : திங்கட்கிழமை இறுதி முடிவு

Friday, July 26th, 2024 at 12:21 (SLT)

2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளர் தொடர்பில் எதிர்வரும் திங்கட்கிழமை இறுதி முடிவு எடுக்கப்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியினா் தெரிவித்துள்ளனா்.இதேவேளை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சுயாதீன வேட்பாளராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க போட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க >>>

பொலிஸ் மா அதிபர் நியமனம் சட்டபூர்வமானது சபாநாயகர் அறிவிப்பு

Friday, July 26th, 2024 at 12:18 (SLT)

பொலிஸ் மா அதிபரை நியமிப்பதற்கான தீர்மானம் சரியானது, சட்டபூர்வமானதும் அரசியலமைப்புக்கு உட்பட்டது மற்றும் நல்லெண்ண அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவு என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார். இன்று வெள்ளிக்கிழமை (26) பாராளுமன்றில் பொலிஸ் மா அதிபரின் நியமனம் குறித்து கருத்துத் தெரிவிக்கையிலேயே சபாநாயகர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

கட்டுப்பணத்தை செலுத்தினார் ரணில்

Friday, July 26th, 2024 at 10:19 (SLT)

உத்தேச ஜனாதிபதித் தேர்தலுக்காக ரணில் விக்கிரமசிங்க  சார்பில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.ஜனாதிபதி சட்டத்தரணி ரொனால் சி பெரேரா இன்று வெள்ளிக்கிழமை (26) காலை தேர்தல் ஆணைக்குழுவில் இவ்வாறு கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

ஜனாதிபதி தேர்தலுக்கான திகதியை அறிவித்தது தேர்தல்கள் ஆணைக்குழு

Friday, July 26th, 2024 at 10:15 (SLT)

2024ம் ஆண்டுக்கான ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதி நடத்தப்படும் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

ஜனாதிபதிக்கு அதிகாரம் கிடையாது : பிரதமர் அறிவிப்பு

Friday, July 26th, 2024 at 10:10 (SLT)

நடைமுறை சட்ட ஏற்பாடுகளுக்கு அமைய பதில் பொலிஸ்மா அதிபரை நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு கிடையாது என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

ஜேர்மனியில் பழமையான ஹம்பர்க் மசூதிக்கு தடை

Thursday, July 25th, 2024 at 10:24 (SLT)

ஜேர்மனியின் மிகப் பாரிய மற்றும் பழமையான ஹம்பர்க் மசூதி (Islamic Center Hamburg) மூடப்பட்டுள்ளது.இந்த மசூதி Blue Mosque என்று உலகம் முழுவதும் பிரபலமாக அறியப்படுகிறது.இந்த மசூதி ஷியா முஸ்லீம் அமைப்பால் நடத்தப்பட்டு வருவதாகவும், ஈரான் அரசுடன் அதற்கு ஆழமான தொடர்பு இருப்பதாகவும் ஜேர்மன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் வாசிக்க >>>

கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன காலமானார்

Thursday, July 25th, 2024 at 10:19 (SLT)

நவ சமசமாஜ கட்சியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ன தனது 81ம் வயதில் காலமானார். கடந்த 2010ம் ஆண்டில் கருணாரட்ன ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டுருந்தார்.விக்ரமபாகு கருணாரட்ன தமிழ் மக்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டைக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் வாசிக்க >>>

ஓய்வூதியதாரர்களுக்கான விசேட கொடுப்பனவாக 3000 ரூபா வழங்க அங்கீகாரம்

Thursday, July 25th, 2024 at 10:15 (SLT)

அரசாங்க சேவையின் ஓய்வூதியதாரர்களுக்காக விசேட மாதாந்த கொடுப்பனவாக 3000 ரூபா வழங்குவதற்கு அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்டுகின்றது. குறித்த தகவலை நேற்று (24) அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

சிங்கள சமூகத்தோடு இணைந்து இந்த நாட்டை கட்டியெழுப்ப நாம் தயார் : சபையில் கஜேந்திரன் எம்.பி

Thursday, July 25th, 2024 at 10:11 (SLT)

நாட்டில் சமஸ்டி முறையிலான அரசியலமைப்பு கொண்டுவரப்படும் பட்சத்தில் சிங்கள சமூகத்தோடு சேர்ந்து இந்த நாட்டை கட்டியெழுப்ப நாங்கள் தயாராக இருக்கின்றோம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் தெரிவித்தார். நேற்றைய(24) பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

நேர்முக பரீட்சைக்கு சென்ற இளைஞன் ரயில் மோதி சாவு

Thursday, July 25th, 2024 at 10:06 (SLT)

பாணந்துறையில் ரயிலில் மோதி இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பாணந்துறை – எலுவில பிரதேசத்தில் வசிக்கும் 22 வயதான கவிது ஹசரேல் என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

250 இந்திய மீனவர்கள் கைது ஜெய்சங்கருக்கு மு.க ஸ்டாலின் அவசர கடிதம்

Thursday, July 25th, 2024 at 10:02 (SLT)

இலங்கையில் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களையும், அவர்களது படகுகளையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் சரத் பொன்சேகா

Thursday, July 25th, 2024 at 9:56 (SLT)

2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போவதாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.இதை அவர் தனது X கணக்கில் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் வாசிக்க >>>