தேர்தலில் வெற்றி பெற முடியாத சில தரப்பினர் நாட்டின் ஸ்திர நிலையை சீர்குலைக்கும் நோக்கில் செயற்படுகின்றனர்

Tuesday, July 9th, 2024 at 20:24 (SLT)

தேர்தலில் வெற்றிபெற முடியாத சில தரப்பினர் நாட்டின் ஸ்திர நிலையை சீர்குலைக்கும் வேலைநிறுத்தங்களை ஆரம்பித்து வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.எந்தெந்தக் குழுக்கள் பொய்யான வாக்குறுதிகளை வழங்குகின்றன என்பதை மக்கள் அடையாளம் காண வேண்டும் எனவும், மக்கள் மீண்டும் தவறு செய்தால், அதனை மாற்றியமைக்க முடியாது எனவும் அவர் வலியுறுத்தினார்.

மேலும் வாசிக்க >>>

உக்ரைனில் கொடூர தாக்குதல்: ரஷ்யா போர்க்குற்றம் செய்ததாக இத்தாலி குற்றம் சாட்டு

Tuesday, July 9th, 2024 at 20:22 (SLT)

உக்ரைனின் மிகப்பெரிய குழந்தைகள் மருத்துவமனை மற்றும் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான நாட்டின் முக்கிய சிகிச்சை மையமான Okhmatdyt மருத்துவமனை தாக்குதல் தொடர்பில் இத்தாலிய வெளியுறவு மந்திரி அன்டோனியோ தஜானி , ரஷ்யாவை சர்வதேச கண்டனத்திற்கு அழைப்பு விடுத்தார்.

மேலும் வாசிக்க >>>

22 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன மலை ஏறுபவரின் உடல் கண்டு பிடிக்கப்பட்டது

Tuesday, July 9th, 2024 at 20:20 (SLT)

பெருவில் பனி உச்சியில் 22 ஆண்டுகளுக்கு முன்பு ஏறும் போது காணாமல் போன அமெரிக்க மலையேறுபவரின் உடல், காலநிலை மாற்றத்தால் ஏற்பட்ட பனி உருகியதால் கண்டுபிடிக்கப்பட்டதாக திங்கள்கிழமை பொலிஸார் தெரிவித்தனர். 22,000 அடிக்கு மேல் உயரமுள்ள ஹுவாஸ்காரன் மலையில் ஏறுபோது வில்லியம் ஸ்டாம்ப்ஃப்ல், ஜூன் 2002 இல் 59 வயதில் காணாமல் போனதாகக் கூறப்பட்டது . அப்போதைய தேடுதல் முயற்சிகள் பலனளிக்கவில்லை.

மேலும் வாசிக்க >>>

கடமைகளை பொறுப்பேற்ற புதிய பதில் வைத்திய அத்தியட்சகர்

Tuesday, July 9th, 2024 at 20:18 (SLT)

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் புதிய பதில் வைத்திய அத்தியட்சகராக வைத்தியர கோபாலமூர்த்தி ரஜீவ் இன்று (09) கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.சுகாதார அமைச்சின் கடிதத்திற்கு அமைய, வைத்தியசாலையில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் சமன் பத்திரண, யாழ்ப்பாணப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் முன்னிலையில் புதிய பதில் வைத்திய அத்தியட்சகர் கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.

மேலும் வாசிக்க >>>

வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள அரச ஊழியர்கள் கோரும்  சம்பள உயர்வை வழங்க வேண்டுமாயின் வெட் வரியை மீண்டும் அதிகரிக்க நேரிடும் : மஹிந்த சிறிவர்தன

Tuesday, July 9th, 2024 at 7:53 (SLT)

வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு வழங்க வேண்டுமாயின், தற்போதைய 18%  வெட்  வரியை 20% – 21% ஆக அதிகரிக்க நேரிடும் எனவும், அரசாங்கத்தினால் அத்தகைய கோரிக்கையை நிறைவேற்ற முடியாது எனவும் திறைசேரி செயலாளர் மஹிந்த சிறிவர்தன தெரிவித்தார்.  

மேலும் வாசிக்க >>>

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை விவகாரம் : மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் அமைய வேண்டும் : அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

Tuesday, July 9th, 2024 at 7:42 (SLT)

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை விவகாரம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள், மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் அமையும் என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

ரயில் பாதையில் பேசிக்கொண்டு சென்ற மாணவன் மாணவிக்கு காத்திருந்த அதிர்ச்சி

Monday, July 8th, 2024 at 12:13 (SLT)

அம்பலாங்கொடை ரயில் பாதையில் பேசிக்கொண்டு சென்ற பாடசாலை மாணவி ஒருவரும் மாணவர் ஒருவரும் ரயிலில் மோதுண்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அம்பலாங்கொடை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மேலும் வாசிக்க >>>

கொழும்பில் பதற்றம் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி பிரபல பாடகி உட்பட பலர் படுகாயம்

Monday, July 8th, 2024 at 12:11 (SLT)

கொழும்பின் புறநகர் பகுதியான அதுருகிரிய நகரில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று நடத்தப்பட்டமையினால் பரபரப்பு நிலை ஏற்பட்டுள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டதுடன் மேலும் ஆறு பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

மேலும் வாசிக்க >>>

இன்று முதல் தொழிற்சங்க போராட்டத்தை முன்னெடுத்த இ.தொ.கா

Monday, July 8th, 2024 at 10:54 (SLT)

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இன்று (08) முதல் பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு எதிராக தொழிற்சங்க போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சரும், இ.தொ.கா பொதுச் செயலாளருமான ஜீவன் தொண்டமான் அறிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

ஆட்களை தெரிந்த போதும் கைது செய்ய முடியவில்லை:உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்

Monday, July 8th, 2024 at 10:49 (SLT)

யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் வாள்வெட்டு வன்முறை செயற்பாடுகள் தொடர்பில் ஆட்களை தெரிந்த போதும் கைது செய்ய முடியவில்லை என யாழ்ப்பாண பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர் தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட பீடி இலைகள்: குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரினால் மீட்பு

Monday, July 8th, 2024 at 10:45 (SLT)

வங்காலை கடற்கரையில் ஒரு தொகுதி பீடி இலைகள் கொண்ட மூடைகள் இன்று (8) காலை மன்னார் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க >>>

இன்றும் நாளையும் முடங்கப்போகும் அரச சேவை

Monday, July 8th, 2024 at 10:41 (SLT)

அரச சேவையை பிரதிநிதித்துவப்படுத்தும் 200 இற்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் இன்று (08) மற்றும் நாளையும் (09) சுகயீன விடுமுறையில் சென்று அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக அரச சேவை தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

ஜனாதிபதி பதவிக் காலம் தொடர்பான மனு இன்று பரிசீலனை

Monday, July 8th, 2024 at 10:37 (SLT)

ஜனாதிபதியின் பதவிக் காலம் தொடர்பாக உயர் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள மனு இன்று (08) பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

மேலும் வாசிக்க >>>

வைத்தியசாலை வளாகத்தில் பதற்றம்: விசேட அதிரடிப் படையினர் குவிப்பு, ஏ9 வீதி முடக்கம்

Monday, July 8th, 2024 at 10:33 (SLT)

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை முன்பாக போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் ஏ9 வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டது. இதன்போது ஏ9 வீதியூடான போக்குவரத்து பெருமளவில் பாதிக்கப்பட்டது.

மேலும் வாசிக்க >>>

பிறந்தநாள் கொண்டாட்டம்: துப்பாக்கி சூட்டில் 4 பேர் பலி

Sunday, July 7th, 2024 at 12:06 (SLT)

அமெரிக்காவில் தெற்கு கரோலினா மாகாணத்தில் கென்டகி நகரில் உள்ள ஒரு வீட்டில் 21 வயது இளைஞரின் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் நடைபெற்றது.நேற்று இரவு நடைபெற்ற பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட நபர் திடீரென தான் கொண்டுவந்த துப்பாக்கியை கொண்டு அங்கிருந்தவர்கள் மீது சரமாரியாக சுட்டார்.

மேலும் வாசிக்க >>>