பதவியேற்றார் பிரித்தானியாவின் புதிய பிரதமர்

Saturday, July 6th, 2024 at 7:24 (SLT)

தொழிலாளர் கட்சியின் தலைவர் கெய்ர் ஸ்டர்மெர் பிரித்தாினயாவின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ளார். மன்னர் சார்ல்ஸை சந்தித்த பின்னர் அவர் உத்தியோகபூர்வமாக பிரதமராக பதவியேற்றுள்ளதாக பிரித்தானிய செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும் வாசிக்க >>>

உரிய திகதியில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று தேர்தல்கள் ஆணையாளரிடம் தெரிவித்துள்ளேன் : ஜனாதிபதி

Saturday, July 6th, 2024 at 7:16 (SLT)

உரிய திகதியில் தேர்தலை நடத்த வேண்டும் எனவும், அதற்காக தேர்தல்கள் ஆணையாளருடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் விடயங்களை விளக்கியதாகவும், இலங்கை ராமன்ய நிகாயவின் மகாநாயக்க வண. மகுலேவே விமல நாயக்க தேரரிடம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

தற்போதைய சூழ்நிலையில் ஜனாதிபதித்தேர்தலைப் பிற்போடுவதே சிறந்த தெரிவாக அமையும் : சி.வி.விக்னேஸ்வரன்

Saturday, July 6th, 2024 at 7:09 (SLT)

நாட்டின் பொருளாதாரம் படிப்படியாக மீட்சியடைந்துவரும் நிலையில், மீண்டும் ஸ்திரமற்ற நிலை தோன்றுவதற்கு வழிகோலும் நடவடிக்கைகளுக்கு இடமளிக்கக்கூடாது எனவும், ஆகவே ஜனாதிபதித்தேர்தல்களைப் பிற்போடுவதே தற்போதைய சூழ்நிலையில் சிறந்த தீர்மானமாக அமையும் எனவும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

அமைச்சர் டக்ளஸ் தலைமையில் நடைபெறும் ஜூலை மாதத்துக்கான யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம்

Friday, July 5th, 2024 at 12:34 (SLT)

பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டுன் மூலம் யாழ். மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட 322 மில்லியன் நிதியின்மூலம் மேற்கொள்ளப்படும் மற்றும் முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்தி திட்டங்களை வினைத்திறனாக நடைமுறைபடுத்துவதற்கான கூட்டம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இணைத்தலைவரும் வடக்கின் ஆளுனருமான திருமதி சாள்ஸின் பிரசன்னத்துடன் இன்று யாழ் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

மேலும் வாசிக்க >>>

கள்ள உறவை கைவிட மறுத்த மனைவி ஆத்திரத்தில் அடித்துக் கொன்ற கணவன்

Friday, July 5th, 2024 at 12:29 (SLT)

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள குறும்பூர் கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி வீரமணி (33). இவருக்கும் கடலூரை சேர்ந்த தெய்வானை (28) என்பவருக்கும் 8 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணமான நிலையில் ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர்.

மேலும் வாசிக்க >>>

பதற்றங்களுக்கு மத்தியில் பதவியை பொறுப்பேற்ற தயாசிறி பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு

Friday, July 5th, 2024 at 12:23 (SLT)

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர கட்சியின் தலைமையகத்திற்கு முன்பாக தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்

மேலும் வாசிக்க >>>

பிரித்தானிய தேர்தலில் வரலாற்று சாதனை : நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கபோகும் முதலாவது ஈழத் தமிழ் பெண்

Friday, July 5th, 2024 at 12:20 (SLT)

பிரித்தானியாவில் தொழிற்கட்சி அமோக வெற்றிபெற்று ஆட்சியமைக்கும் நிலையில் தொழிற்கட்சியின் சார்பில் போட்டியிட்ட ஈழத் தமிழ் பெண் உமா குமரன் ஸ்ராட்போட் அன்ட் பௌவ் தொகுதியில் வெற்றிபெற்று நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

கெஹலியவின் குடும்ப உறுப்பினர்கள் மீது நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Friday, July 5th, 2024 at 10:56 (SLT)

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உட்பட 6 குடும்ப உறுப்பினர்களின் நிலையான வைப்பு கணக்குகள் மற்றும் ஆயுள் காப்புறுதிக் கொள்கைகளை 3 மாதங்களுக்கு இடைநிறுத்துமாறு நீதிமன்றம் இன்று (05) உத்தரவிட்டுள்ளது.

மேலும் வாசிக்க >>>

ஆசிரியருக்கு முகநூலில் அவதூறு : கிராம அலுவலர் கைது

Friday, July 5th, 2024 at 10:53 (SLT)

வவுனியாவில் ஆசிரியர் ஒருவருக்கு போலி முகநூலில் அவதூறை ஏற்படுத்தி தொலைபேசியில் மிரட்டல் விடுத்த கிராம அலுவலர் ஒருவர் கைதாகி நீதிமன்றத்தால் நேற்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

திருமலைக்கு எடுத்து செல்லப்பட்ட சம்பந்தனின் பூதவுடல்: ஞாயிற்றுக்கிழமை இறுதிக்கிரியை

Friday, July 5th, 2024 at 10:47 (SLT)

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவர் இராஜவரோதயம் சம்பந்தனது பூதவுடல் யாழ்ப்பாணத்தில் இருந்து இன்றையதினம் விமானம் மூலம் திருகோணமலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

மேலும் வாசிக்க >>>

பிரித்தானிய தேர்தல் 14 ஆண்டுகளுக்குப் பின் ஆட்சியைக் கைப்பற்றியது தொழிற்கட்சி: பிரதமராகிறார் கீர் ஸ்டார்மர்

Friday, July 5th, 2024 at 10:40 (SLT)

பிரித்தானிய நாடாளுமன்றத் தேர்தலில் தொழிற்கட்சி சார்பில் போட்டியிட்ட கீர் ஸ்டார்மர் வெற்றியீட்டியுள்ளார். பிரித்தானிய நாடாளுமன்றத்தில் 650 தொகுதிகளுக்கான தேர்தல் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற நிலையில், ஆளும் கட்சியான கன்சர்வேட்டிங், தொழிலாளர் கட்சி, லிபரெல் டெமோக்ராட்ஸ் கட்சி ஆகியவை வேட்பாளர்களை நியமித்தன.

மேலும் வாசிக்க >>>

கடன் மறுசீரமைப்பின் வெற்றி வலுசக்தித் துறையை பலப்படுத்தும் : மின்சக்தி மற்றும் வலுசக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த

Thursday, July 4th, 2024 at 17:06 (SLT)

கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளின் வெற்றியினால் கடந்த நெருக்கடியின் போது முடங்கிக் கிடந்த வலுசக்தித் துறை தொடர்பான திட்டங்களை மீண்டும் நடைமுறைப்படுத்த முடியும் எனத் தெரிவிக்கும் மின்சக்தி மற்றும் வலுசக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த மின்சார நெருக்கடியைத் தீர்க்க இது பெரும் உதவியாக அமையும் எனவும் தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

நியமனத்தை பெற்ற பின்னர் பணிப் புறக்கணிப்பில் இணைந்து பிள்ளைகளின் எதிர்காலத்தை இருளாக்காதீர்கள்: கல்வி அமைச்சர்

Thursday, July 4th, 2024 at 8:40 (SLT)

நியமனத்தை பெற்ற பின்னர் பணிப்புறக்கணிப்பில் இணைந்து பிள்ளைகளின் எதிர்காலத்தை இருளாக்காதீர்கள் என நேற்றையதினம் (03) ஆசிரியர் பணிக்கு இணைத்துக் கொள்ளப்பட்ட பட்டதாரிகளுக்கு கல்வியமைச்சர் சுசில் பிரேம ஜயந்த அறிவுரை வழங்கியுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

பெண்ணின் கருப்பையிலிருந்த 15 கிலோ கட்டி வெற்றிகரமாக அகற்றி இலங்கை மருத்துவர்கள் சாதனை

Thursday, July 4th, 2024 at 8:28 (SLT)

ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையில் பெண்ணொருவரின் கருப்பையில் இருந்து சுமார் பதினைந்து கிலோகிராம் எடையுள்ள கட்டியை வைத்தியர்கள் குழு வெற்றிகரமாக அகற்றியுள்ளனர். மகப்பேற்று வைத்திய நிபுணர் டொக்டர் சமந்தா சமரவிக்ரம உள்ளிட்ட வைத்தியர்கள் குழு இந்த சாதனையை நிகழ்தியுள்ளனர்.

மேலும் வாசிக்க >>>

ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு தடைவிதிக்க உச்ச நீதிமன்றில் மனு

Thursday, July 4th, 2024 at 8:24 (SLT)

ஜனாதிபதியின் பதவிக்காலம் தொடர்பில் அரசியலமைப்பிற்கிணங்க உச்ச நீதிமன்றம் அதன் உறுதிப்பாட்டை தெரிவிக்கும் வரை, ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு தடை விதிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சட்டத்தரணி சமிந்த லெனவ என்பவரினால் மேற்படி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க >>>