கொரோனா கண்காணிப்பு முகாமாக இருந்த ஓட்டல் இடிந்த விபத்தில் பலி எண்ணிக்கை 26 ஆக உயர்வு
சீனாவின் ஃபுஜியான் மாகாணம், லிச்செங் மாவட்டத்துக்கு உட்பட்ட த்தின் குவான்சு நகரில் 5 மாடிகளை கொண்ட க்சின்ஜியான் என்ற ஓட்டல் தற்காலிக கொரோனா கண்காணிப்பு முகாமாக மாற்றப்பட்டு, கொரோனா பாதிப்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நபர்கள் அதில் தங்க வைக்கப்பட்டு இருந்தனர்.
இதற்கிடையில் கடந்த 7-ம் தேதி இரவு இந்த ஓட்டல் திடீரென இடிந்து விழுந்தது. அங்கு தங்கியிருந்த 71 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர். இதுபற்றி தகவல் கிடைத்ததும் 100-க்கும் மேற்பட்ட மீட்பு குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
கட்டிட இடுபாடுகளில் சிக்கி இருந்த 42 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். மேலும், நேற்றுவரை 20 உடல்கள் மீட்கப்பட்டிருந்தன.
இந்நிலையில், இடிந்து விழுந்த கட்டிடத்தில் இருந்து இன்று மேலும் 6 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இதனால் கொரோனா கண்காணிப்பு முகாமாக செயல்பட்டு வந்த ஓட்டல் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது.
மேலும், 3 பேர் இன்னும் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி இருப்பதாகவும் அவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்றுவருவதாக மீட்பு படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply