கொரோனா பாதிப்பு காரணமாக மாலத்தீவில் அவசரநிலை பிரகடனம்

தெற்காசிய சிறிய தீவு நாடான மாலத்தீவில் உள்ள ஒரு சொகுசு விடுதி ஊழியர்கள் 2 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கடந்த 7-ந்தேதி கண்டறியப்பட்டது. இத்தாலி சுற்றுலா பயணி ஒருவர் மூலமாக இந்த வைரஸ் பரவியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து மாலத்தீவில் உள்ள பெரும்பாலான சொகுசு விடுதிகள் மூடப்பட்டன.

அங்கு இதுவரை 8 பேருக்கு நோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து நோய் தடுப்பு நடவடிக்கைகளை அரசு முடுக்கி விட்டுள்ளது.

இந்தநிலையில் மாலத்தீவில் 30 நாட்களுக்கு அவசரநிலை பிரகடனம் செய்யப்படுவதாக அந்த நாட்டின் சுகாதாரத்துறை மந்திரி அப்துல்லா அமீன் தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply