இஸ்ரேலுக்கு முக கவசம், மருந்துகளை ஏற்றுமதி செய்யுங்கள் : மோடிக்கு நெதன்யாகு வேண்டுகோள்
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக முக கவசங்கள் மற்றும் மருந்துகளுக்கான ஏற்றுமதிக்கு தடை விதிப்பது என்று இந்தியா முடிவு செய்தது. இந்த நிலையில் பிரதமர் மோடியிடம் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தொலைபேசியில் பேசினார்.
அப்போது, இந்தியாவில் இருந்து இஸ்ரேலுக்கு முக கவசங்கள், மருந்துகள் ஏற்றுமதி செய்ய அனுமதிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
இந்த நிலையில் மருந்துகளுக்கான மூலப்பொருட்களை இஸ்ரேலுக்கு ஏற்றுமதி செய்ய பிரதமர் மோடி அனுமதி அளித்துள்ளதாகவும், முக கவசங்கள் ஏற்றுமதிக்கான தடையை நீக்குவது குறித்து இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை என்றும் இஸ்ரேல் சுகாதாரத்துறை துணை இயக்குனர் குரோடோ தெரிவித்தார்.
மேலும் அவர் கூறும் போது, ‘மருந்துகளை இஸ்ரேலுக்கு மட்டும் ஏற்றுமதி செய்ய சிறப்பு அனுமதியை இந்திய அரசு வழங்கி உள்ளது’ என்றார்.
இஸ்ரேல் நாட்டில் கொரோனா வைரசுக்கு 150 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். அங்கு ‘ஷாப்பிங் மால்’கள், உடற்பயிற்சி கூடங்கள், பள்ளிகள், ஓட்டல்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply