இஸ்ரேல் பிரதமருக்கு கொரோனா பாதிப்பா?

இஸ்ரேலில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் அங்கு இதுவரை 213 பேருக்கு நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் அந்த நாட்டு அரசு தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

ஏற்கனவே நாடு முழுவதும் பள்ளிக்கூடங்களுக்கு காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் வணிகவளாகங்கள், சினிமா தியேட்டர்கள் மற்றும் ஓட்டல்களை மூட பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாஹூ நேற்று முன்தினம் உத்தரவிட்டார்.

இந்த நிலையில் உலக நாடுகளின் தலைவர்கள் மற்றும் அவர்களின் உறவினர்களை கொரோனா வைரஸ் தாக்கி வரும் சூழலில் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாஹூவுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதா என்பதை கண்டறிய பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

பரிசோதனையின் முடிவில் அவர் கொரோனா வைரசால் பாதிக்கப்படவில்லை என்பது உறுதிசெய்யப்பட்டதாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பெஞ்சமின் நேட்டன்யாஹூவுடன் அவருக்கு நெருக்கமானவர்களுக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும், அவர்களுக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply