இலங்கை அரசியல் அமைப்பிற்கு எதிராக வெளிநாடுகளில் செயற்படும் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களின் விடுமுறை மனு நிராகரிப்பு
இலங்கை அரசியல் அமைப்பிற்கு எதிராக வெளிநாடுகளில் செயற்படும் தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் மேலும் விடுமுறை நீடிப்புக் கோரி முன்வைக்கப்பட்ட மனு நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் விடுமுறை கோரி இன்று (ஜூன். 10) நாடாளுமன்றத்தில் மனு ஒன்றை சமர்ப்பித்துள்ளனர். இந்த மனுவுக்கு அரச தரப்பில் இருந்து கடும் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது.
சிவாஜிலிங்கம், செல்வம் அடைக்கலநாதன், எஸ் கஜேந்திரன், ஜெயானந்தமூர்த்தி, பத்மினி சிதம்பரநாதன் ஆகியோர் நாடாளுமன்றத்திற்கு கடந்த ஆறு மாதங்கள் வருகை தராத நிலையில் மேலும் 3 மாதகால விடுமுறை கோரி அந்த மனுவில் கேட்கப்பட்டது.
இவர்களின் இந்த விடுமுறை மனுவை தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் ஊடாக சமர்ப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது குறித்து அமைச்சர் தினேஸ் குணவர்த்தன கருத்து தெரிவிக்கும் போது இந்த நாட்டின் அரசியல் அமைப்பிற்கு எதிராக செயற்படும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விடுமுறை வழங்க முடியுமா என கேள்வி எழுந்துள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளிநாடுகளில் உள்ள ஊடகங்களுக்கு உண்மைக்கு புறம்பான முறையில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். எனவே இவர்களின் இந்த கோரிக்கை ஏற்றுக் கொள்ள முடியாது என தெரிவித்துள்ளார்
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply