கொரோனா வைரஸ் தாக்குதல் : ஐரோப்பாவில் பலி எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டியது
சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. ஆரம்பத்தில் சீனாவில் மட்டுமே பரவத்தொடங்கிய இந்த வைரஸ் உலகின் 160-க்கும் மேற்பட்ட அதிகமான நாடுகளில் பரவி மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கி வருகிறது.
உலகம் முழுவதும் வேகமாக பரவிவரும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியுள்ளது. மேலும், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 லட்சத்தை நெருங்கியுள்ளது.
சீனாவில் பெரும் அளவில் உயிரிழப்பை ஏற்படுத்திவந்த இந்த வைரஸ் தற்போது ஐரோப்பிய நாடுகளில் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது.
இந்நிலையில், ஐரோப்பாவில் கொரோனா தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை தற்போது 5 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
குறிப்பாக, இத்தாலியில் 3,405 பேர், ஸ்பெயினில் 1,002 பேர், பிரான்சில் 372 பேர், இங்கிலாந்தில் 144 பேர், நெதர்லாந்தில் 76 பேர் என பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply