அவுஸ்திரேலியாவில் இலங்கை மாணவர்கள் மீதும் தாக்குதல்
அவுஸ்திரேலியாவில் படித்து வரும் இந்திய மாணவர்கள் மீது, அண்மைக்காலத்தில் அடிக்கடி நிறவெறியர்கள் தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில், மெல்போர்ன் நகரின் ஒரு பகுதியான மெக்குரைன் என்ற இடத்தில் 3 இலங்கை மாணவர்கள் மீதும் தாக்குதல் நடந்துள்ளது. அவர்கள் தங்கி இருந்த வீட்டின் கண்ணாடிகளையும், அவுஸ்திரேலிய வன்முறை கும்பல் அடித்து நொறுக்கியது. வீட்டின் முன் நிறுத்தப்பட்டு இருந்த காரையும் சேதப்படுத்தினார்கள்.
இதுபற்றி இலங்கை மாணவர் விஜய சூரியா கூறுகையில், “நாங்கள் தெருவில் நடந்து சென்ற போது, சில அவுஸ்திரேலியர் எங்களை நிற வெறி கொண்டு பேசினார்கள். எங்கள் தெருக்களுக்கு வரக்கூடாது. இங்கிருந்து ஓடி விடுங்கள் என்று கத்தியை காட்டி மிரட்டினார்கள்” என்றார்.
இந்தியா- அவுஸ்திரேலியா சங்க தலைவர் மது காலியா இதுபற்றி கூறுகையில், “இதுவரை இந்திய மாணவர்கள் மீது மட்டும் நடந்த தாக்குதல், இப்போது இலங்கை மாணவர்கள் மீதும் திரும்பி இருக்கிறது. இதை அரசு கட்டுப்படுத்த வேண்டும்” என்றார்.
அவுஸ்திரேலியாவில் இந்திய மாணவர்களை குறிவைத்து தொடர்ந்து தாக்குதல் நடந்து வருகிறது. இதற்கு பதிலடியாக மாணவர்கள் எதிர் தாக்குதல் நடத்தினர். இதுபற்றி குறிப்பிட்ட அவுஸ்திரேலிய பிரதமர் கெவின் ருத், இந்திய மாணவர்கள் பதிலடி தரும் நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என்று எச்சரிக்கை விடுத்தார். ஆனால், இந்த எச்சரிக்கையையும் மீறி, இந்திய மாணவர்கள் நேற்று 3-வது நாளாக கண்டன பேரணி நடத்தினர்.
சிட்னி நகரில் இந்தியர்கள் நிறைந்த ஹாரிஸ் பார்க் பகுதியில் இந்தப் பேரணி நடந்தது. தங்களுக்கு பாதுகாப்பு அளிக்குமாறு விடுத்த கோரிக்கையை போலீசார் அலட்சியம் செய்வதாக மாணவர்கள் குற்றம் சாட்டினர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply