பிரபாகரன் மரணச் சான்றிதழை சமர்ப்பிக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவு
புலிகளால் `சினைப்பர்` தாக்குதல் மூலம் 2005 ஆகஸ்ட் மாதம் கொழும்பில் வைத்து கொல்லப்பட்ட இலங்கையின் முன்னாள் வெளிநாட்டமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் படுகொலைச் சம்பவம் குறித்த வழக்கை கொழும்பு உயர் நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துள்ளது. இவ் வழக்கில் முதலாம் பிரதிவாதியான புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் பெயர் உள்ளது. இதையடுத்து பிரபாகரனின் மரணச் சான்றிதழை நீதிமன்றில் சமர்ப்பிக்க வேண்டும் என்று நீதிபதி குமுதினி விக்கிரமசிங்க இன்று உத்தரவிட்டுள்ளார்.
அமரர் லக்ஸ்மன் கதிர்காமர் படுகொலைச் சம்பவம் குறித்த விசாரணைகளின் முதலாம் பிரதிவாதியான பிரபாகரனது மரணச் சான்றிதழ் சமர்ப்பிக்கப்பட வேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ள அவர் நீதிமன்ற கோப்பு பராமரிப்பிற்கு குறித்த மரணச் சான்றிதழை அவசியம் எனவும் தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : TELOnewsYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply