சரிந்ததா வடகொரிய? மிக முக்கிய அறிவிப்புக்கு தயாராகும் வடகொரியா?

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் தொடர்பாக சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட அந்நாட்டு அதிகாரிகள் தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. வடகொரியாவில் 10-க்கும் மேற்பட்ட நிகழ்வுகளில் கலந்து கொண்ட ஒரு செய்தியாளர், கிம் ஜாங் உன் இறந்து விட்டதாக கூறுவதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அவரது மரணத்தால் வட கொரிய தலைவர்கள் அதிர்ச்சியும், பதட்டமும் அடைந்துள்ளனர். அவரது இறப்பு குறித்து அறிவிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுவதாக அந்த செய்தியாளர் கூறியுள்ளார்.

அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்ட பிறகு உணர்வற்ற நிலைக்கு சென்றுவிட்டார் என்றும் அவரை மீட்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் அவர் மீண்டு வருவார் என்ற நம்பிக்கை இல்லை என மருத்துவர்கள் தெரிவித்துவிட்டதாக அந்த செய்தியாளர் கூறியுள்ளார்.

மேலும் அவரது தந்தை இறந்த போது அவரது உடல் வைக்கப்பட்ட வண்டி பொது வெளியில் வைக்கப்பட்டுள்ளது.

எனவே கிம் இறந்த செய்தியை அறிவிக்க அந்நாடு தயாராகி வருவதாகவே தெரிகிறது என அந்த செய்தியாளர் தெரிவித்தார். இந்த அறிவிப்புகளில் சிறிது தாமதமாகலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அது போல் தனக்கு பிறகு வடகொரியாவை தனது தங்கைதான் ஆள வேண்டும் என கிம் ஜாங் உன் விரும்பியதாகவும் கிம் ஏற்கனே கூறியுள்ளதாகவும் இந்த செய்தியாளர் கூறினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply