ரஷ்யாவில் அதிகபட்சமாக ஒரே நாளில் 10,633 பேருக்கு கொரோனா தொற்று
உலகம் முழுவதும் கொலைகார கொரோனா வைரசால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள முதல் 10 நாடுகளில் ரஷ்யாவும் உள்ளது. ஆனால் கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளானவர்களை மிக குறைவான எண்ணிக்கையில் கொண்ட 2-வது நாடாக ரஷ்யா இருந்தது.
ஒரே மாதத்தில் அங்கு நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. தற்போது ரஷ்யாவில் கொரோனா வைரஸ் மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. அதன்படி அந்த நாட்டில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 34 ஆயிரத்தை கடந்து சென்று கொண்டிருக்கிறது. அங்கு நேற்று ஒருநாளில் மட்டும் 10,633 -பேருக்கு புதிதாக கொரொனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இறப்பு எண்ணிக்கையும் 1280 ஆக அதிகரித்துள்ளதாகவும், தொற்று பாதித்தவர்களில் 50 சதவிகிதம் பேருக்கு எந்த அறிகுறியும் காணப்படவில்லை என்றும் ரஷ்ய அரசு தெரிவித்துள்ளது. மொத்த தொற்று எண்ணிக்கையில் பாதிக்கு மேற்பட்டவர்கள் தலைநகர் மாஸ்கோவில் உள்ளனர். இதுவரை சராசரியாக 5000 ஆக இருந்த தினசரி தொற்று எண்ணிக்கை கடந்த நான்கு நாட்களாக இரு மடங்காக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply