பிரதமர் மஹிந்தவின் கூட்டத்தில் கலந்துக் கொள்ளப் போவதில்லை

பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் இன்று நடைபெறவுள்ள கூட்டத்தில் கலந்துக் கொள்ள போவதில்லை என ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது. அறிக்கை ஒன்று வெளியிட்டு ஐக்கிய தேசியக் கட்சி இதனை தெரிவித்துள்ளது. பிரதமர் கடந்த பாராளுமன்றத்தின் 225 உறுப்பினர்களையும் இன்று விசேட கலந்துரையாடலுக்கு அலரி மாளிகைக்கு அழைத்திருந்தார்.

இதற்கு முன்னர் இக்கூட்டத்தில் கலந்துக்கொள்வதாக ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்திருந்தது. ஆனால் தற்போது கூட்டத்தில் கலந்துக்கொள்ள போவதில்லை என ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply