பொலிவியாவில் ராணுவ விமானம் விழுந்து நொறுங்கியது : 6 பேர் பலி
தென் அமெரிக்க நாடான பொலிவியாவில் சுமார் 1,500 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு இந்த கொடிய வைரசால் இதுவரை 71 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பரவலை கட்டுப்படுத்த அந்த நாட்டு அரசு தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கை மற்றும் மனிதாபிமான பணிகளுக்காக ராணுவம் களம் இறக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அந்த நாட்டின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள டிரினிடாட் நகரில் சிக்கியிருந்த ஸ்பெயின் நாட்டை சேர்ந்த சிலரை மீட்கும் பணியில் ராணுவ விமானம் ஈடுபடுத்தப்பட்டது.
அதன்படி ஸ்பெயின் நாட்டினர் 4 பேரை ஏற்றிக்கொண்டு டிரினிடாட் நகரில் இருந்து சாண்டா குருஸ் நகருக்கு விமானம் புறப்பட்டது. விமானத்தில் விமானி உள்பட 2 வீரர்கள் இருந்தனர்.
புறப்பட்டு சென்ற சிறிது நேரத்தில் விமானம் திடீரென தரையில் விழுந்து நொறுங்கியது. இதில் ஸ்பெயின் நாட்டினர் 4 பேரும், 2 வீரர்களும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். விபத்துக்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியவில்லை. இது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக பொலிவியா ராணுவம் தெரிவித்துள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply