உயிர்களை பலி வாங்குவது புரியவில்லையா தலைமைக்கு?: கமல்ஹாசன்
அண்டை மாநிலங்களான கர்நாடகா, ஆந்திராவில் மதுக்கடைகள் ஏற்கனவே திறக்கப்பட்டுள்ள நிலையில் மே 7-ம் தேதி முதல் தமிழகத்திலும் டாஸ்மாக் மதுபானக் கடைகளை திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது. தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் நடிகரும், மக்கள் நீதி மய்ய கட்சி தலைவருமான கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
கோயம்பேடை காப்பாற்ற இயலாமல் தொற்று எண்ணிக்கையை அதிகப்படுத்திய அரசு, இப்பொழுது டாஸ்மாக்கை திறக்குமாம்.
அரசின் ஒவ்வொரு தவறும் உயிர்களை பலி வாங்குவது புரியவில்லையா தலைமைக்கு.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply