கொரோனா தொற்றுக்குள்ளானவரின் விந்தணுக்களில் வைரஸ் தொடர்ந்து இருக்கலாம்
கொவிட் – 19 தொற்று நோயால் பாதிக்கப்பட்ட சில ஆண்கள் குணமடைந்த பின்னரும் அவர்களின் விந்தணுக்களில் வைரஸ் தொடர்ந்து இருக்கலாம் என சீனாவில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது. கொவிட் வைரஸ் காரணமாக உலகில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 250,000 தாண்டியுள்ளதுடன் 39,32,986 மில்லியன் மக்கள் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் ஆகியோரும் கொவிட் 19 பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்,
எனினும் அவர்களுக்கு கொவிட் 19 தொற்று ஏற்படவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
டிரம்பின் பிரத்தியேக உதவியாளராக கடமையாற்றும் அமெரிக்க கடற்படை உறுப்பினர் ஒருவர் கொவிட் 19 தொற்றுக்கு உள்ளாகியமை கண்டறியப்பட்டதை தொடர்ந்து இவர்கள் பரிசேதனைக்கு உட்படுத்தப்பட்டுனர்.
இந்த தனிப்பட்ட உதவியாளர்கள் எல்லா நேரங்களிலும் ஜனாதிபதியின் உணவுக்கு பொறுப்பானவர்கள் என்பதோடு ஜனாதிபதியுடன் நெருங்கி பழகுபவர்கள்.
வெள்ளை மாளிகை ஊழியர்களுக்கு சமூக இடைவெளியை பேண வேண்டிய அவசியம் இல்லை என்பதுடன், முகக்கவசங்களை அணிவதும் கட்டாயமில்லை.
இந்த நிலையில் தனது பிரத்தியேக உதவியாளர் வைரஸ் தொற்றுக்கு உள்ளான நிலையில் தான் தினமும் கொவிட் சோதனைக்கு உட்படுத்தப்படுவதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். கடந்த 24 மணித்தியாலங்களில் அமெரிக்காவில் கொவிட் 19 தொற்றுக்குள்ளாகி சுமார் 2,129 பேர் உயிரிழந்துள்ளதுடன், இதுவரை 76,928 பேர் மொத்தமாக உயிரிழந்துள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply