பாகிஸ்தானுக்கு ரூ.1,200 கோடி நிதியுதவி : ஐரோப்பிய கூட்டமைப்பு வழங்கியது

பாகிஸ்தானுக்காக ஐரோப்பிய கூட்டமைப்பின் தூதர் ஆண்ட்ரூல்லா காமினாரா

பாகிஸ்தானில் கொரோனா வைரஸ் மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. அங்கு கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் அங்கு 1,764 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 26 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. பலி எண்ணிக்கையும் 600-ஐ எட்டும் நிலையில் உள்ளது.

ஏற்கனவே கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் பாகிஸ்தான் அரசு, கொரோனாவால் ஏற்பட்டுள்ள பொருளாதார இழப்பை ஈடுகட்ட முடியாமல் திணறி வருகிறது. பாகிஸ்தானின் பொருளாதார பிரச்சினையை சரி செய்ய சர்வதேச நிதியம், உலக வங்கி ஆகியவை அந்த நாட்டுக்கு அவசர கால கடன் மற்றும் நிதியுதவி அளித்துள்ளது. இந்த நிலையில், கொரோனா தொற்றை சமாளிப்பதற்கும் நாட்டின் பொருளாதார மற்றும் பாதுகாப்பு முன்னேற்றங்களை அதிகரிப்பதற்கும் பாகிஸ்தானுக்கு 163 மில்லியன் அமெரிக்க டாலருக்கும் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.1,232 கோடியே 76 லட்சத்து 90 ஆயிரம்) அதிகமான உதவித் தொகையை ஐரோப்பிய கூட்டமைப்பு வழங்கியுள்ளது.

பாகிஸ்தானுக்காக ஐரோப்பிய கூட்டமைப்பின் தூதர் ஆண்ட்ரூல்லா காமினாரா நேற்று முன்தினம் பிரதமர் இம்ரான்கானை நேரில் சந்தித்து பேசினார். அப்போது அவர் கொரோனா நெருக்கடியின் போதும், அதற்கு பிறகும் பாகிஸ்தானுக்கு ஐரோப்பிய கூட்டமைப்பு உறுதுணையாக இருக்கும் என இம்ரான்கானிடம் கூறினார்.

அதனை தொடர்ந்து, 163 மில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமான நிதி உதவியை அவர் இம்ரான்கானிடம் வழங்கினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply