சென்னையில் 25 பயணிகளுடன் பஸ்களை இயக்க திட்டம்
சென்னையில் வருகிற 18-ந்தேதி முதல் பஸ்களை இயக்கும் போது இருக்கைகளில் 20 பயணிகளை அமரச் செய்தும், 5 பயணிகளை நிற்பதற்கு அனுமதித்தும் ஆக மொத்தம் 25 பயணிகளுடன் பஸ்களை இயக்கலாம் என்று முடிவு செய்துள்ளனர். கொரோனா வைரசின் தாக்கம் குறைய குறைய பஸ்களில் பயணிகளை அதிகரித்துக்கொள்ளலாம் என்றும் முடிவு எடுத்துள்ளனர்.
இதேபோல் மின்சார ரெயில்களில் ஒரு பெட்டிக்கு 50 பேர்களை அனுமதிக்கும் வகையில் ரெயில்களை இயக்குவது என்றும், மெட்ரோ ரெயிலில் மொத்தம் 160 பயணிகளுடன் இயக்குவது குறித்தும் ஆலோசனை நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து அரசு உயர் அதிகாரி கூறியதாவது:-
பஸ், ரெயில் போக்குவரத்து தவிர்க்க முடியாத ஒன்றாகும். மக்களின் சகஜ வாழ்க்கை மீண்டும் திரும்பும் வகையில் பஸ், ரெயில் போக்குவரத்தை விரைவில் செயல்பாட்டுக்கு கொண்டு வர அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
இதற்காக முன்எச்சரிக்கை நடவடிக்கைகளுடன் என்னென்ன பாதுகாப்பு அம்சங்களை செயல்படுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டு வருகிறது. ஊரடங்கு தளர்த்தப்பட்டதும் பொதுமக்களுக்கு அந்த அறிவிப்புகள் முறையாக தெரிவிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply