ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் கொரோனா தீர்மானத்துக்கு அமெரிக்கா முட்டுக்கட்டை : சீனா குற்றச்சாட்டு

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில்  கொரோனா தீர்மானத்துக்கு அமெரிக்கா முட்டுக்கட்டை - சீனா குற்றச்சாட்டு

கொரோனா வைரசுக்கு எதிரான போரில், உலக சுகாதார நிறுவனத்தின் பணிகளுக்கு பாராட்டு தெரிவிக்கும் தீர்மானத்தை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் நிறைவேற்ற உலக நாடுகள் விரும்புகின்றன. ஆனால், அதற்கு அமெரிக்கா முட்டுக்கட்டையாக இருப்பதாக சீனா குற்றம் சாட்டியுள்ளது.

இதுகுறித்து சீன தூதரக அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

இந்த தீர்மானத்தை பிரான்ஸ், துனியா ஆகிய நாடுகள் வடிவமைத்துள்ளன. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் உறுப்பு நாடுகள் அதை ஆதரிக்கின்றன. சீனாவும் ஆதரிக்கிறது.அமெரிக்கா முதலில் ஆதரித்தது.

ஆனால், பிறகு பின்வாங்கி விட்டது. முட்டுக்கட்டை போட்டு வருகிறது. இதனால், இந்த தீர்மானத்தை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிறைவேற்ற முடியவில்லை. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் ஒற்றுமையை குழிதோண்டி புதைத்து வருகிறது. இன்றைய நிலைக்கு அமெரிக்காவே முழு பொறுப்பு. இவ்வாறு அவர் கூறினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply