இந்தியர்கள், சீனர்களுக்கு நிகராக போட்டியிடுங்கள்: அமெரிக்க ஜனாதிபதி

இந்தியர்களுக்கும், சீனர்களுக்கும் நிகராக போட்டியிடுங்கள் என அமெரிக்கர்களுக்கு ஜனாதிபதி ஒபாமா வேண்டுகோள் விடுத்துள்ளார். அமெரிக்காவில், விஸ்கோன்சின் மாகாணத்தில் பேசிய ஒபாமா அமெரிக்க குழந்தைகள் கல்வியில் அதிக ஆர்வம் காட்டுவதில்லை என கூறினார். அதுவும் குறிப்பாக அறிவியல் பாடத்தை பொறுத்த வரை இந்தியர்களும், சீனர்களும் முந்திக் கொண்டு செல்கின்றனர்.

கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்கா சர்வதேச நாடுகள் மத்தியில் தொடர்ந்து பணக்கார நாடாக திகழ்வதற்கு அமெரிக்கர்கள் கல்வித்தரம் ஒரு காரணம்.

ஆனால் தற்போது அமெரிக்கர்களை காட்டிலும், இந்தியர்களும், சீனர்களும் கல்வியில் சிறந்து விளங்குகின்றனர். இந்நிலை தொடர்ந்தால் அமெரிக்கா பின்னுக்கு தள்ளப்படும். உலகம் போட்டி மயமாகிவிட்ட நிலையில், மிகச்சிறந்த பள்ளி, கல்லூரிகள் இருந்தும், அமெரிக்கர்கள் கல்வியில் பின்தங்க துவங்கியிருப்பது வருத்தத்துக்குரியது. இதை ஆரம்ப நிலையிலேயே சரி செய்ய வேண்டுமென ஒபாமா கூறியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply