66 பொலிஸ் உயர் அதிகாரிகள் உடனடியாக இடமாற்றம்
பாதுகாப்பு அமைச்சினதும் பொலிஸ் ஆணைக்குழுவினதும் பரிந்துரைகளுக்கமைய 66 பொலிஸ் உயரதிகாரிகள் உடனடியாக அமுலுக்கு வரும்வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதன்படி கிளிநொச்சி பிரிவுக்கும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள் பதில் பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள், பொலிஸ் அத்தியட்சகர்கள் முதலானோர் பல்வேறு இடங்களுக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
திருகோணமலை நடவடிக்கை பிரிவின் பிரதிப் பொலிஸ் மா அதிபராகக் கடமையாற்றிய எஸ். டபிள்யூ. எம். ரீ. பி. சமரக்கோன் கிளிநொச்சி பிராந்தியத்திற்கான பிரதிப் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு நகர போக்குவரத்துப் பிரிவின் பொலிஸ் அத்தியட்சகராகப் பணியாற்றிய ரி. கணேசநாதன் அநுராதபுரம் போக்குவரத்துப் பிரிவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
குற்றப் பிரிவின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராகக் கடமையாற்றிய கே. அரசரட்ணம் குற்றப்பிரிவின் பதில் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அமைச்சரவைப் பாதுகாப்புப் பிரிவின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராகக் கடமையாற்றிய ரீ. எம். என். ஹமீட் தூதரகப் பாதுகாப்புப் பிரிவின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply