திருகோணமலையில் மீன்பிடித் தடைகள் நீக்கம்
இலங்கையில் உள்நாட்டுப் போர் காரணமாக கடந்த பல ஆண்டுகளாக திருகோணமலை மாவட்ட மீனவர்கள் தொழில் செய்வதில் விதிக்கப்பட்டிருந்த பல்வேறு கட்டுப்பாடுகளை விலக்கிக் கொள்வதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது. திருகோணமலை மவட்டத்தில் நீண்ட நாட்களாகவே மேற்கொள்ளப்பட்டு வந்த மீன்பிடித் தடைகள் காரணமாக இந்த மாவட்ட மீனவர்கள் பெரும் சிரமங்களை அனுபவித்துவந்தனர்.
திங்கட்கிழமை முதல் தடைகள் நீக்கப்படுவதாக ஜனாதிபதியின் சிரேஸ்ட ஆலோசகரும் பாராளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஸ திருகோணமலையில் இடம்பெற்ற மீனவருடனான சந்திப்பில் தெரிவித்திருக்கிறார்.
திருகோணமலை மாவட்ட மீனவர்கள் பகல் வேளையிலேயே மீன்பிடிக்க அனுமதிக்கப்பட்டிருந்தனர். புதிய நடைமுறையின் பிரகாரம் இவர்கள் 24 மணி நேரமும் மீன்பிடிக்க அனுமதிக்கப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் திருகோணமலை துறைமுகப் பகுதி பாதுகாப்பு வலயத்தில் அமைந்திருக்கின்ற காரணத்தினால் இங்கு மட்டும் காலை ஆறு மணியிலிருந்து மாலை நான்கு மணிவரை மீன்பிடிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே வேளை கடந்த காலங்களில் பாதுகாப்பு காரணம் கூறப்பட்டு மீனவர்கள் 15 குதிரைவலு சக்திகொண்ட மீன்பிடிப்படகுகள் மூலமே மீன் பிடிக்க அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
இனிமேல் இவர்கள் 25 குதிரைவலு கொண்ட மீன்பிடிப் படகுகள் மூலம் மீன்பிடிக்க முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply