ஓமான் கடலில் கடத்தப்பட்ட கப்பலில் இலங்கையர் எழுவர்

ஓமான் கடலில் வைத்து சோமாலியா கடற்கொள்ளை யர்களினால் கடத்தப்பட்ட வர்த்தகக் கப்பலில் இலங்கையர்கள் சிலரும் சிக்கியிருப்பதாக வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் கூறின. இதனை உறுதிப்படுத்துவதற்கு வெளிநாட்டுத் தூதரகங்களின் உதவியை நாடியுள்ளதாவும் அமைச்சு தெரிவித்தது.நியூஸிலாந்துக்குச் சொந்தமான மேற்படி வர்த்தகக் கப்பல் ஓமான் கடலினூடாக செல்கையில் சோமாலிய கடற்கொள்ளையர்களினால் நேற்று முன்தினம்  கடத்தப்பட்டு சோமாலிய கடற்பகுதிக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு கூறியது. இந்தக் கப்பலில் இலங்கையர் 7 பேர் இருப்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

ஆனால் இதனை உறுதிப்படுத்த ஓமான் மற்றும் வெளிநாட்டு தூதரகங்களின் உதவியை நாடியுள்ளதாக வெளிவிகார அமைச்சு தெரிவித்தது. அவர்களை மீட்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிய வருகிறது. இதேவேளை மேற்படி கப்பலில் பணி புரிந்த தமது உறவினர்களை மீட்டுத் தருமாறு கப்பல் சிப்பந்திகளின் உறவினர்கள் கப்பல் கம்பனியை கோரியுள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply