மீள்குடியேற்றப் பிரச்சினைக்கு இலங்கை அரசு முன்னுரிமை கொடுக்கும்
இடம்பெயர்ந்த மக்களை மீளக் குடியமர்த்தும் பிரச்சினை தொடர்பாக இலங்கை அரசு முன்னுரிமை கொடுத்து செயற்படும் என்று இந்தியா எதிர்பார்ப்பதாக அந்நாட்டின் வெளிவிவகாரத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணா கூறியிருக்கின்றார். இலங்கையில் இராணுவ நடவடிக்கை இப்போது முடிவடைந்துவிட்டது. இலங்கையில் உள்ள சிறுபான்மைத் தமிழ் மக்களின் அவாக்களை நிறை வேற்றுவதற்கான அவசர நடவடிக்கைகளை சிறிலங்கா அரசாங்கம் மேற்கொள்வதில் ஈடுபாட்டுடன் இருப்பதை இப்போது இந்தியாவால் எவ்விதம் உறுதிப்படுத்த முடியும் என ‘அவுட் லுக்’ இதழ் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே கிருஸ்ணா மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இக்கேள்விக்கு இந்திய வெளிவிவகார அமைச்சர் அளித்துள்ள பதில் வருமாறு:
நாடாளுமன்றத்தில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் இந்த விடயம் தொடர்பாக கூறியுள்ளார். அவசரமான விடயம் என்ற அடிப்படையில் இடம்பெயர்ந்த தமிழர்களின் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
பல்லாயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். அவர்களை அவர்களின் சொந்த நிலத்தில், சொந்த வீடுகளில், சொந்த பட்டினங்களில் மீள்குடியமர்த்த வேண்டியுள்ளது. இடம்பெயர்ந்திருக்கும் தமிழ் மக்களை மீளக்குடியமர்த்த பண உதவி வழங்குவதாக இந்திய அரசாங்கம் உறுதியளித்திருக்கிறது.
இந்த மீள்குடியேற்றப் பிரச்சினை தொடர்பாக உரியமுறையில் இலங்கை அரசு முன்னுரிமை கொடுத்து செயற்படும் என்று நாம் எதிர்பார்க்கிறோம் என்று கிருஸ்ணா கூறியுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply