கிழக்கு மாகாணத்தில் மூடப்பட்டுள்ள முதலாவது இராணுவ முகாம்

யுத்தம் முடிவுக்கு வந்த பின் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு – வாழைச்சேனை (ஏ-15) பிரதான வீதியில் அமைந்திருந்த கும்புறுமுலை இராணுவ முகாம் மற்றும் சோதனைச்சாவடி ஆகியன இன்று திங்கட்கிழமை முதல் முற்றாக அகற்றப்பட்டுள்ளன. பல வருடங்களாக கும்புறுமுலை முச்சந்தியில் அமைந்திருந்த இவ் இராணுவ முகாம் மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான முகாம்களில் ஒன்றாகக் கருதப்பட்டு வந்தது.

இலங்கை அரசாங்கத்திற்கும் புலிகளுக்குமிடையிலான 2002 – போர் நிறுத்தம் முறிவடைந்த பின் இம்முகாமுக்கு முன்னால் பிரதான சோதனைச் சாவடியொன்று அமைக்கப்பட்டது. பொலிஸாரும் இராணுவத்தினரும் இணைந்து சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தனர்.

அவ்வழியாக போக்குவரத்து செய்யும் வாகனங்களுடன் மக்களும் தீவிரமாக சோதனையிடப்பட்டு வந்தனர். இதன் காரணமாக இந்தச் சோதனைச் சாவடியில் மட்டும் 10 முதல் 30 நிமிடங்கள் வரை பயண தாமதங்களும் ஏற்பட்டன.

கிழக்கு மாகாணம் முழுமையாக விடுவிக்கப்பட்டு விட்டதாக அரசாங்கம் அறிவித்த பின்பு, மட்டக்களப்பு மாவட்டத்தில் மூடப்பட்டுள்ள முதலாவது இராணுவ முகாம் இதுவாகும். தொப்பிகலைப் பிரதேசத்தில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கையின் போது அதற்கு உதவியாக இம்முகாமிலிருந்தும் எறிகணைத் தாக்குதல்கள் மேற் கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply