வன்னி நலன்புரி முகாம்களில் உள்ள கிழக்கு மாகாண மக்களை முதல் கட்டமாக மீள் குடியேற்ற திட்டம்

வன்னி இடைத்தங்கள் முகாம்களில் வசிக்கும் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த மக்களை முதற் கட்டமாக மீள் குடியேற்றம் செய்ய அரசு ஆலோசித்து வருவதாக  ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் வன்னிப் பிராந்திய வட்டாரங்கள் ரெலோ நியூஸ்க்கு கருத்து தெரிவித்துள்ளன. யுத்த காலத்தில் வன்னிப் பிரதேசத்தில் வாழ்ந்த கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த மக்கள்பலர் தற்போது வவுனியாவை அண்டியுள்ள பல்வேறு நலன்புரி முகாம்களில் உள்ளனர். அவர்களை முதற்கட்டமாக  மீள் குடியேற்ற அரச உத்தேசித்துள்ளதாக தெரிகிறது.

வன்னி மாவட்டங்களில் புலிகளால் தாழ்க்கப்பட்ட புதை கண்ணி வெடிகள் முழுமையாக அகற்றப்பட்ட பின்பே அப்பிரதேசத்தை சேர்ந்த மக்களை மீள் குடியேற்றம் செய்யலாம் என்பதால் இடைத்தங்கள் முகாம்களில் வசிக்கும் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த மக்களை முதற் கட்டமாக அவர்களின் முன்னைய வாழ்விடங்களில் மீள் குடியேற்றம் செய்ய அரசு ஆலோசித்து வருகிறது. ஜனாதிபதி மியன்மாரில் இருந்து நாடு திரும்பியதும் முதல் கட்ட மீள் குடியேற்றம் குறித்து இறுதி முடிவெடுப்பாரென மேற்படி வட்டாரங்கள் ரெலோநியூஸ்க்கு தெரிவித்துள்ளன.

மூலம்/ஆக்கம் : TELOnews


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply