விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் தேர்தலிலில் போட்டியிட முடியும்

விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் ஆயுதங்களைக் கைவிட்டு ஜனநாயகச் செயற்பாடுகளில் இணைந்துகொண்டால் தேர்தல்களில் அவர் போட்டியிட முடியும் என இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரோகித்த போகல்லாகம தெரிவித்துள்ளார். 
 
இலங்கையின் அரசியலுக்குள் நுழைந்திருக்கும் பிள்ளையான் மற்றும் கருணாவை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வரவேற்றிருப்பதாகக் குறிப்பிட்ட அவர், பிரபாகரன் ஆயுதங்களைக் கைவிட்டு ஜனநாயக ரீதியாகச் செயற்பட்டு வடபகுதி மக்கள் அவரைத் தெரிவுசெய்தால் வடக்கில் முக்கிய பகுதி அவருக்கு வழங்கப்படும் எனக் கூறினார்.

“பிரபாகரன் அரசியலுக்கு வருவதை அரசாங்கம் தடுக்கவில்லை. அவர் ஆயுதங்களைக் கைவிட்டு தேர்தலில் போட்டியிடவேண்டும், அதனை நாங்கள் வரவேற்கிறோம்” என நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சர் தெரிவித்தார்.

எனினும், பிரபாகரன் சரணடையும் பட்சத்தில் அவருக்கு வழங்கப்பட்டிருக்கும் 200 ஆண்டுகள் சிறைத்தண்டனை உள்ளிட்ட சட்டரீதியான தண்டனைகளை அவர் ஏற்றுக்கொள்ளவேண்டியிருக்கும் என்றார் அமைச்சர். “பிரபாகரன் அனைத்துக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாகவும் மன்னிப்புப் பெற்றுக்கொண்டால் வடக்குத் தேர்தலில் அவர் போட்டியிட முடியும்” என போகல்லாகம குறிப்பிட்டார்.

விடுதலைப் புலிகள் தோல்வியை ஒத்துக்கொண்டு, ஆயுதங்களைக் கைவிட்டால் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தயாராகவே இருப்பதாக வெளிவிவகார அமைச்சர் கூறினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply