ஒரு நாளில் 1,358 பேர் டிஸ்சார்ஜ் : மாவட்ட வாரியாக முழு விவரம்
தமிழகத்தில் நேற்று புதிதாக 2 ஆயிரத்து 710 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 62 ஆயிரத்து 87 ஆக அதிகரித்துள்ளது.
இதில் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களும் உள்ளடக்கம் ஆகும். வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 27 ஆயிரத்து 178 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும், கொரோனா தாக்குதலுக்கு நேற்று ஒரே நாளில் 37 பேர் உயிரிழந்தனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 794 ஆக அதிகரித்துள்ளது.
ஆனாலும், மருத்துவத்துறையினரின் தன்னலமற்ற சேவையால் நேற்று ஒரே நாளில் கொரோனா பரவியவர்களில் 1,358 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
இதனால் தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 34 ஆயிரத்து 112 ஆக அதிகரித்துள்ளது.
மாவட்ட வாரியாக கொரோனாவில் இருந்து குணமடைந்தோர்/டிஸ்சார்ஜ் எண்ணிக்கை:-
அரியலூர் – 387
செங்கல்பட்டு – 1,968
சென்னை – 23,756
கோவை – 164
கடலூர் – 492
தர்மபுரி – 17
திண்டுக்கல் – 213
ஈரோடு – 72
கள்ளக்குறிச்சி – 301
காஞ்சிபுரம் – 600
கன்னியாகுமரி – 99
கரூர் – 86
கிருஷ்ணகிரி – 32
மதுரை – 389
நாகை – 67
நாமக்கல் – 85
நீலகிரி – 14
பெரம்பலூர் – 144
புதுக்கோட்டை – 36
ராமநாதபுரம் – 131
ராணிப்பேட்டை – 291
சேலம் – 204
சிவகங்கை – 53
தென்காசி – 108
தஞ்சாவூர் – 130
தேனி – 129
திருப்பத்தூர் – 40
திருவள்ளூர் – 1,427
திருவண்ணாமலை – 465
திருவாரூர் – 105
தூத்துக்குடி – 391
திருநெல்வேலி – 428
திருப்பூர் – 116
திருச்சி – 162
வேலூர் – 111
விழுப்புரம் – 391
விருதுநகர் – 139
விமானநிலைய கண்காணிப்பு
வெளிநாடு – 119
உள்நாடு – 59
ரெயில் நிலைய கண்காணிப்பு – 191
மொத்தம் – 34,112
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply