சீன நிறுவனங்களுக்கு நிர்பந்தம்: அமெரிக்காவுக்கு சீன அரசு எதிர்ப்பு
அமெரிக்காவில் சீன ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் 20 சீன நிறுவனங்களின் பட்டியலை அமெரிக்க ராணுவ துறை கடந்த வாரம் வெளியிட்டது. இவை தொழில்நுட்ப மற்றும் மொபைல் நிறுவனங்கள் ஆகும். இந்த நிறுவனங்கள் மீது பொருளாதார தடை விதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் இதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து சீன வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் கூறியதாவது:-
சீன நிறுவனங்கள் மீது அமெரிக்கா அர்த்தமற்ற நிர்பந்தத்தை செலுத்தி வருகிறது. தேச பாதுகாப்பு என்ற பெயரில், தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி தனிநபருக்கு சொந்தமான நிறுவனங்களை அச்சுறுத்தி வருகிறது. சந்தை பொருளாதாரத்துக்கு எதிரான இந்த செயலுக்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துக் கொள்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply