59 செயலிகளுக்கான தடையை தொடர்ந்து சீன சமூகவலைத்தள கணக்கை நீக்கினார் பிரதமர் மோடி
சீனாவில் கூகுள், பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சர்வதேச சமூக வலைத் தளங்களுக்கு அனுமதி கிடையாது.அதற்கு பதிலாக வேறு சில செயலிகளை சீன நிறுவனங்கள் உருவாக்கியுள்ளன. அதில் வெய்போ என்பது டுவிட்டருக்கு இணையான சமூக வலைத்தளமாகும். கடந்த 2015ம் ஆண்டு தனது சீன பயணத்திற்கு முன்னதாக பிரதமர் மோடி வெய்போவில் கணக்குத் தொடங்கினார்.
அவரது கணக்கினை 2.44 லட்சம் பேர் பின்தொடர்ந்தனர். இந்த நிலையில் இந்திய இறையாண்மைக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி சீனாவின் 59 செயலிகளுக்கு கடந்த திங்கட்கிழமை மத்திய அரசு தடை விதித்தது. அதன் தொடர்ச்சியாக, தனது வெய்போ கணக்கினை பிரதமர் மோடி நீக்கியுள்ளார். சீனாவின் சமூக வலைத்தளத்திலிருந்து மோடி வெளியேறியதன் மூலம் தூதரகம் மற்றும் பொருளாதார ரீதியில் மட்டுமன்றி தனிப்பட்ட முறையிலும் அவர் சீனாவுக்கு தக்க பதில் அளித்துள்ளதாக பா.ஜ.க. பாராட்டியுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply