இடைத்தங்கல் முகாம்களில் உள்ள பெண்களுக்கு அவுஸ்ரேலியா நிதியுதவி
யுத்தம் காரணமாக வடபகுதியில் இடம்பெயர்ந்து இடைத்தங்கல் முகாம்களில் தங்கியிருக்கும் பெண்களின் சுகாதாரத் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கு ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியும் முன்னெடுத்திருக்கும் நடவடிக்கைகளுக்கு உதவியளிக்க அவுஸ்ரேலிய அரசாங்கம் முன்வந்துள்ளது. இதற்காக 5 இலட்சம் அவுஸ்ரேலிய டொலர்களை வழங்குவதற்கும் அவுஸ்ரேலிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கியிருக்கும் 280,000 பேரில் 75,000 பேர் பெண்கள் இருக்கின்றனர். இவர்களில் 6,000 கர்ப்பிணித் தாய்மாரும் உள்ளடங்குகின்றனர். இந்த நிலையில் கர்ப்பிணித் தாய்மார்கள் உள்ளிட்ட பெண்களின் சுகாதாரத் தேவைகளை நிறைவேற்றவேண்டிய தேவை காணப்படுகிறது. பிரசவத்திற்கு முன்னரான காலப்பகுதி மற்றும் பிரசவத்திற்குப் பின்னரான காலப்பகுதி, அவசர மருத்துவத் தேவைகள் போன்றவற்றைக் கவனிப்பதற்கான தேவைகள் காணப்படுகின்றன. இவற்றை ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியம், இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து நிறைவேற்றி வருகிறது.
மெனிக்பாம் நலன்புரி நிலையப் பகுதியில் சுகாதார முகாம்களை அமைத்து பெண்களின் சுகாதார சேவைகள் நிறைவேற்றப்பட்டுவருகின்றன. இந்த மருத்துவ முகாம்கள் பெண்களுக்கெனத் தனியாக அமைக்கப்பட்டு செயற்பட்டு வருகின்றன. இவற்றுக்கு உதவி வழங்கவே அவுஸ்ரேலிய அரசாங்கம் முன்வந்துள்ளது
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply