ஐ.நா.வில் முக்கிய பங்காற்ற விரும்பும் இந்தியாவுக்கு ரஷ்யா சீனா ஆதரவு
ஐக்கிய நாடு சபை விவகாரங்களில் முக்கிய பங்காற்ற விரும்பும் இந்தியாவுக்கு ரஷ்யா மற்றும் சீனா ஆதரவளித்துள்ளது.
ரஷ்யாவில் நடைபெற்ற பிரேசில், ரஷ்யா, இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் பங்கேற்ற ‘பிரிக்’ (BRIC) முதல் உச்சி மாநாட்டிற்கு பின்னர், கூட்டறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது.
அதில் ஐ.நா. விவகாரங்களில் இந்தியா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகள் முக்கிய பங்காற்றுவதற்கான அந்தஸ்தை அளிக்க தாங்கள் ஆதரவளிப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக நாடுகள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் அச்சுறுத்தல்கள் தொடர்பான விவகாரங்களில் ஐ.நா.வில் இந்தியாவும், பிரேசிலும் முக்கிய பங்காற்ற வேண்டும் என தாங்கள் விரும்புவதாகவும் அவர்கள் அதில் கூறியுள்ளனர்.
பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா ஆகிய நாடுகளின் (பிரிக்) மொத்த மக்கள் தொகை உலக மக்கள் தொகையில் 40 விழுக்காடாகும். உலக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இவற்றின் பங்கு 40 சதவீதமும் கூட.
உலகப் பொருளாதார வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்லும் ஆற்றல் இந்த நாடுகளின் குழுவுக்கு உள்ளது. சொல்லப்போனால் உலகப் பொருளாதாரம் மீண்டு வருவதுகூட இந்த நாடுகளின் பொருளாதார வெற்றியுடன் இணைந்திருக்கிறது.
பிரிக் நாடுகளிலேயே இந்தியாவின் பொருளாதாரம் வெகு வேகமாக வளர்ந்து வருகிறது. தற்போதுள்ள நிதி மற்றும் பொருளாதார தேக்க நிலையை சமாளிப்பதற்கு சர்வதேச அளவிலான நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க நாம் தயாராக உள்ளோம். சர்வதேச விவகாரங்களில் பல்தரப்பு கோட்பாட்டை மேம்படுத்துவதில் பிரிக் நாடுகளுக்கு பங்குள்ளது.
நடப்பு நிகழ்வுகளுக்கு ஏற்ப, ஐக்கிய நாடுகள் அவை உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளில் சீர்திருத்ததை கொண்டுவரச் செய்ய வேண்டும். இந்தக் கருத்துக்களின் அடிப்படையில், பிரிக் நாடுகளின் உச்சி மாநாடு முதன் முறையாக தனித்து நடைபெறுவது மிக முக்கியமான ஒன்று.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply