மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைகளின் இரு பிரிவுகள் இன்று முதல் பூட்டு
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு,கிளினிக் பிரிவு ஆகியனவற்றை இன்று முதல் தற்காலிகமாக மூடுவதென முடிவெடுக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரச வைத்திய அதிகாரிகள் சங்க செயலாளர் டாக்டர் கே. சுந்தரகுமார் தெரிவித்தார்.
நாவற்குடா அரசாங்க வைத்தியசாலை டாக்டர் பாலித பத்மகுமார சுட்டுக்கொலை செய்யப்பட்டதையடுத்து மட்டக்களப்பு மாவட்ட வைத்தியசாலைகளில் கடமையாற்றிய டாக்டர்கள் கொழும்பு திரும்பினர். இதன் காரணமாக இந்த மாவட்டத்திலுள்ள அரசாங்க வைத்தியசாலைகளின் வழமையான பணிகள் முடங்கியுள்ளன.
இது தொடர்பில் நாம் கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் 130 டாக்டர்கள் பணிபுரிந்து வந்தனர் ஆனால் நாவற்குடா சம்பவத்தின் பின்னர் 46 சிங்கள டாக்டர்கள் இங்கிருந்து வெளியேறிவிட்டனர். இதன் காரணமாக வைத்தியசாலையின் பணிகள் ஸ்தம்பிதமடைந்துள்ளன. அவசர சிகிச்சைகளுக்கு மட்டுமே முன்னுரிமை வழங்கப்பட்டு வருகிறது.
வெளிநோயாளர் பிரிவோ கிளினிக் பிரிவோ வழமையான நிலையில் இயங்க முடியாதுள்ளன. இதன் காரணமாக இந்த இரு பிரிவுகளையும் தற்காலிகமாக இன்று முதல் மூடி விடுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. இன்று காலையில் நடைபெற்ற வைத்தியர் சங்கக் கூட்டத்திலேயே இந்த முடிவெடுக்கப்பட்டது.
இந்த இரு பிரிவுகளையும் தொடர்ந்து மூடி வைப்பதா
அல்லது திறப்பதா என்பது பற்றி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் நடைபெறவுள்ள கூட்டத்தின முடிவைப் பொறுத்தே தீர்மானிக்கப்படுமெனவும் அவர் தொவித்தார்.
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply