சிறீதரனின் ஆதரவாளர்கள் மீது ஈ.பி.டி.பி ஆதரவாளர்கள் தாக்குதல்
கிளிநொச்சி உருத்திரபுரம் பகுதியில் நேற்று பிற்பகல் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் வேட்பாளருமாகிய சி.சிறீதரனை ஆதரித்து தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட தொண்டர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தன்னை ஈ.பி.டி.பி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகுமாரின் ஆதரவாளர் என கூறிக் கொண்ட ஒருவர் தாக்குதல் மேற்கொண்டதுடன் கூரிய ஆயுதங்களாலும் தாக்க முயன்றுள்ளார். பின்னர் அப்பகுதி மக்களின் ஒத்துளைப்புடன் அந்தப் பகுதியை விட்டு தொண்டர்கள் வெளியேறியுள்ளனர்.
தாம் தாக்குதலுக்குள்ளான விடயம் தொடர்பில் முறைப்பாடு செய்வதற்காக கிளிநொச்சி பொலிஸ் நிலையம் சென்ற போது, தாக்குதல் நடத்திய நபரின் மனைவியை தாக்கியதாக தொலைபேசி மூலம் முறைப்பாடு கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தெரிவித்து இருவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
குறித்த விடயம் தொடர்பில் பரப்புரையில் ஈடுபட்ட மற்றையவர்களை வினவிய போது,
முன்னாள் ஈ.பி.டி.பி நாாடளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் பொலிஸ் செல்வாக்கினை பயன்படுத்தி போலியான ஒரு முறைப்பாட்டை தொலைபேசி மூலம் வழங்கியதனை தொடர்ந்தே தமது தொண்டர்கள் இருவர் கைது செய்யப்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
தாக்குதல் நடத்திய சந்திரகுமாரின் ஆதரவாளர் ஊர் மக்களுடன் தகராறு மற்றும், தாக்குதல் மேற்கொண்டு பொலிஸ் நிலையம் சென்ற போது, தனது மனைவியை தாக்கியதாகவே பலமுறை முறைப்பாடு செய்து தப்பியுள்ளதாக ஊர் மக்கள் தெரிவித்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
கோட்டாபய ஜனதிபதியானதன் பின்னர் வேட்பாளராக களமிறங்கிய சந்திரகுமார், வேட்பாளராக உள்ள போதே இவ்வாறான அடாவடி மற்றும் செல்வாக்கினை பயன்படுத்தி சட்ட துஸ்பிரயோகங்களை மேற்கொண்டு வருகின்றார் என்றால் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டால் கிளிநொச்சி மன்ணின் நிலமை என்னவாகும் ஆகவே மக்கள் விழிப்படைய வேண்டும் என தெரிவித்தனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply