இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2782 ஆக அதிகரிப்பு
சேனாபுர புனர்வாழ்வு நிலையத்தை சேர்ந்த 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.அதன்படி, இந்நாட்டில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 2782 ஆக அதிகரித்துள்ளது.
நாட்டில் இதுவரை 2106 பேர் பூரணமாக குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, தற்போதைய நிலையில் 655 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply